இஸ்ரேலின் அச்சுறுத்தலுக்கு ஈரான் பதிலடி: விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை
தங்களது இருப்பை இஸ்ரேல்(Israel) அச்சுறுத்தினால் தங்களது அணுசக்தி கோட்பாடு மாற்றப்படும் என ஈரான்(Iran) அறிவித்துள்ளது.
குறித்த தகவலை ஈரானின் அதியுயர் தலைவரான அயதுல்லா அலி கமேனியின்(Ali Khamenei) ஆலோசகர் கர்ராசி(Karrazi) குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக மேலும் தெரியவருகையில், அணுவாயுதங்களை பெற்றுக் கொள்ளுதல் அல்லது உற்பத்தி செய்தல் போன்ற எண்ணம் தங்களுக்கு இல்லையென ஈரான் தெரிவித்து வருகின்றது.
அணுவாயுத தொழில்நுட்பங்கள்
எனினும் ஈரானில் அணுவாயுத தொழில்நுட்பங்கள் காணப்படுவதாக மேற்கத்தேய நாடுகள் சந்தேகம் வெளியிட்டு வருகின்றன.
இவ்வாறான பின்னணியில் தங்களது அணுசக்தி கோட்பாடு தொடர்பில் ஈரானிய அதிகாரிகள் தற்போது கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.
இந்நிலையில், தற்போது இஸ்ரேல் தங்களது இருப்பை அச்சுறுத்தினால் அணுசக்தி கோட்பாடு மாற்றமடையுமென ஈரானின் அதியுயர் தலைவரின் ஆலோசகர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போது எச்சரித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |