மதுபான விலை குறைப்பு தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை !
மதுபான போத்தல் விலையை குறைக்குமாறு ராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க (Samara Sampath Dasanayake) கோரிக்கை விடுத்துள்ளார்.
குறித்த விடயத்தை மஹியங்கனையில் நேற்றைய தினம் (04) நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்னமும் கல் எனப்படும் மதுபான வகையின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
மதுபானம் அருந்துவோர்
இந்தக் கோரிக்கை விடுத்த போது ஜனாதிபதி ரணில் (Ranil Wickremesinghe) பிரசார மேடையில் அமர்ந்திருந்தார்.
ஜனாதிபதி அரசாங்க ஊழியர்களுக்கு சலுகை வழங்கினார் எனவும் மற்றும் மதுபானம் அருந்துவோருக்கு சலுகை வழங்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் வாக்களிப்பவர்களில் அதிகமானவர்கள் மதுபானம் அருந்துவோர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அரசாங்க ஊழியர்கள் 16 இலட்சம் எனவும் மதுபானம் அருந்துவோரின் எண்ணிக்கை 50 இலட்சம் எனவும் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |