மதுபானசாலைகள் திறந்திருக்கும் நேரங்கள் தொடர்பில் வெளியான தகவல்
பல்பொருள் அங்காடிகள் திறக்கும் நேரம் மற்றும் மூடும் நேரங்களை திருத்தியமைத்து விசேட அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையானது, அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் கலால் கட்டளைச் சட்டத்தின் பிரிவு 32 உப பிரிவு 1 இன் கீழ் அதிகாரங்களுக்கு இணங்க வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், பல்பொருள் அங்காடிகள் திறக்கும் மற்றும் மூடும் நேரம் டிசம்பர் 9ஆம் திகதி முதல் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
நேரங்கள்
அதன்படி, இந்நாட்டு மதுபானசாலை உரிமங்கள் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரையும், வெளிநாட்டு மதுபான சில்லறை விற்பனை உரிமம் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரையும், சுற்றுலா வாரியத்தின் அனுமதி இல்லாத விடுதிகள் காலை 10 மணி முதல் இரவு 11 மணி வரையும் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

மேலும், சுற்றுலா வாரியத்தின் அங்கீகாரம் பெற்ற விடுதிகளின் உரிம வகைப்பாட்டின் அடிப்படையில் நள்ளிரவு 12 அல்லது அதிகாலை 2 மணி வரை திறந்திருக்கும்.
அத்தோடு, கிளப் மற்றும் மதுபானசாலைகள் நள்ளிரவு 12 மணி வரை திறந்திருக்குமெனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
5 நாட்கள் முன்