அதிகளவில் விவாகரத்து நடைபெறும் நாடுகளின் பட்டியல் - முதலிடத்தில் தெற்காசிய நாடு!
திருமணம் செய்த தம்பதிகளில் நன்றாக வாழ்பவர்கள் இருந்தாலும், மனக்கசப்புகள், சண்டைகளால் விவாகரத்து செய்பவர்களும் இருக்கின்றனர்.
தங்களுக்குள் இருந்த பிரச்சனைகள் பெரிதாகி நீதிமன்றம் வரை சென்று, தம்பதிகள் விவாகரத்து செய்து கொள்ளுவது பெரும்பாலும் எல்லா நாடுகளிலும் உள்ளது.
அந்தவகையில், உலகில் அதிகம் விவாகரத்து நடக்கும் நாடுகளின் பட்டியல் இப்போது வெளியாகியுள்ளது.
விவாகரத்து நடக்கும் நாடுகளின் பட்டியல்

குறித்த பட்டியலின்படி, பெலாரஸ் 5 ஆவது இடத்தில் உள்ளது, அந்த நாட்டில் திருமணமாகும் தம்பதிகளில் 1000 பேரில் 3.7% பேர் விவாகரத்து பெற்று பிரிவதாக சொல்லப்படுகின்றது.
மோல்டோவா இதில் 4 ஆவது இடத்தில் உள்ளது, அந்த நாட்டில் திருமணமாகும் தம்பதிகளில் 1000 பேரில் 3.8% பேர் விவாகரத்து பெற்று பிரிவதாக சொல்லப்படுகின்றது.
ரஷ்யா குறித்த பட்டியலில் 3 ஆவது இடத்தில் உள்ளது, அந்த நாட்டில் திருமணமாகும் தம்பதிகளில் 1000 பேரில் 3.9% பேர் விவாகரத்து பெற்று பிரிவதாக சொல்லப்படுகின்றது.
இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் குட்டி குவாம் எனப்படும் அமெரிக்க நாடு உள்ளதுடன், அங்கு திருமணம் செய்துகொள்ளும் தம்பதிகளில் சுமார் 4.3% பேர் விவாகரத்து பெறுகிறார்கள்.
குறித்த பட்டியலின்படி முதலிடத்தில் மாலைதீவு உள்ளது, அங்கு திருமணம் செய்யும் 1000 பேர்களில் 5.5% தம்பதிகள் விவாகரத்து பெறுகின்றனர்.
இதேவேளை, குறித்த பட்டியலின்படி, கோஸ்டா ரிக்கா, உக்ரைன், ஜோர்ஜியா, அருபா, சீனா போன்ற நாடுகள் முறையே முதல் பத்து இடங்களில் உள்ளது.