தொடரும் நெருக்கடி!! பதவி விலகுகிறார் லிட்ரோ நிறுவனத்தின் தலைவர்
விஜித ஹேரத் தனது லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இவர் கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி லிட்ரோ நிறுவனத்தின் தலைவராக பதவியேற்றார்.
தெஷார ஜயசிங்க பதவி விலகியமையை அடுத்து விஜித ஹேரத் லிட்ரோ நிறுவனத்தின் தலைவராக பொறுப்பேற்றிருந்தார்.
இதேவேளை, விஜித ஹேரத் இதற்கு முன்னர் அவர் இலங்கை மின்சார சபையின் தலைவராக செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
தொடரும் நெருக்கடி!!
இலங்கையில் எரிவாயுவிற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், அவ்வப்போது உள்நாட்டு சிலிண்டர் விநியோகத்தை லிட்ரோ நிறுவனம் இடைநிறுத்தியுள்ள நிலையில் ஹேரத்தின் ராஜினாமா செய்கிறார்.
எரிவாயு சிலிண்டர்களை பெற்றுக்கொள்வதற்கு பொதுமக்கள் பல மணி நேரம் நீண்ட வரிசையில் நிற்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள நிலையில், தட்டுப்பாடு காரணமாக எரிவாயுவின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது.
எரிவாயு கொண்ட கப்பல் ஒன்று நேற்று இலங்கைக்கு வந்திருந்த போதிலும் லிட்ரோ நிறுவனம் எரிவாயு சிலிண்டர்களை இன்றும் விநியோகிக்கவில்லை.
கப்பலை வெளியிட தேவையான 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை நிறுவனத்தால் கண்டுபிடிக்க முடியவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

