லிட்ரோ எரிவாயு நிறுவனம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவித்தல்
srilanka
peoples
gas
litro
By S P Thas
சமையல் எரிவாயுவை விநியோகிக்கும் நடவடிக்கை இன்று முதல் மீள ஆரம்பிக்கப்படுவதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
நாளொன்றுக்கு 120,000 வீட்டு சமையல் எரிவாயு கொள்கலன்களை சந்தைக்கு விநியோகிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எரிவாயுவை தாங்கி வந்துள்ள கப்பல்களுக்கான கொடுப்பனவுகள் நேற்று முன்தினம் மாலை செலுத்தப்பட்டுள்ள நிலையில் நேற்று முதல் எரிவாயு இறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
3500 மெட்ரிக் தொன் எரிவாயு அடங்கிய கப்பலில் உள்ள எரிவாயுவை கெரவலப்பிட்டியில் தரையிறக்கும் பணிகள் ஆரம்பமாகியுள்ளதாக லிட்ரோ நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
எனவே தற்போது நிலவும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு எதிர்வரும் சில தினங்களில் குறைவடையலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி