மக்களுக்கு மற்றுமொரு அதிர்ச்சி தகவல் - மீண்டும் அதிகரிக்கிறது எரிவாயு விலை
srilanka
price
rise
litro gas
Lasantha Agagiyawanna
By Sumithiran
எரிவாயுவின் விலை மேலும் அதிகரிக்கப்படுவதை தவிர்க்க முடியாது என இராஜாங்க அமைச்சர் லசந்த அககியவன்ன தெரிவித்துள்ளார்.
லிட்ரோ எரிவாயுவின் விலையை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதா என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
தற்சமயம் ஒரு இலட்சம் காஸ் சிலிண்டர்கள் நாளாந்தம் சந்தைக்கு விடப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அதன்படி இம்மாதம் 4ஆம் திகதியுடன் எரிவாயு நிறைவடையும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, எரிவாயு விலையை மீண்டும் அதிகரிப்பதற்கு அமைச்சரவையின் அனுமதி கோரப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் தெஷார ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஏற்கனவே லாப் காஸ் நிறுவனம் விலையை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி