நீர்த் தாங்கி கவிழ்ந்து சிறுமி பரிதாப மரணம்!
Sri Lanka Police
Polonnaruwa
Sri Lankan Peoples
By Sathangani
பொலன்னறுவை - அரலகங்வில, ருஹுனுகம பிரதேசத்தில் பிளாஸ்டிக் தண்ணீர் தாங்கி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கழிவறையில் உள்ள தண்ணீர் தொட்டிக்கு கீழே இருந்த தண்ணீர்க் குழாயில் நீராடிக் கொண்டிருந்த போதே இந்த விபத்து ஏற்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
குறித்த சிறுமியின் உடலில் நீர் தாங்கி வீழ்ந்த நிலையில் பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
பொலன்னறுவை வைத்தியசாலையில்
ருஹுணுகம பிரதேசத்தில் வசித்து வந்த 03 வயதும் 07 மாதங்களுமான சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சடலம் பொலன்னறுவை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
பிரேத பரிசோதனை இன்று (14) இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி