பதவியை தூக்கியெறிந்தார் பொறிஸ் ஜோன்சன்
புதிய இணைப்பு
பிரித்தானிய அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை இழந்துள்ள நிலையில், ஆளும் கென்சவேட்டிவ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து பொறிஸ் ஜோன்சன் விலகியுள்ளார்.
பிரதமர் பொறுப்பில் இருந்தும் பொறிஸ் ஜோன்சன் விலக வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுவடைந்துவரும் நிலையில், இடைக்கால பிரதமராக தொடர பொறிஸ் ஜோன்சன் விரும்பம் தெரிவித்துள்ளார்
முதலாம் இணைப்பு
அவரின் பதவி விலகலின் பின் இந்தக் கோடையில் கொன்சர்வேடிவ் கட்சிக்கான தலைமைப் போட்டி நடைபெறும் எனக் கூறப்படுகிறது.
எனினும் அவர் இலையுதிர் காலம் வரை பிரதமராக நீடிப்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது. அத்தோடு, ஒக்டோபரில் நடைபெறவுள்ள கட்சி மாநாட்டில் புதிய பிரதமர் தெரிவுசெய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகல்
கட்சியின் துணை அமைப்பாளராக செயற்பட்டு வந்த கிறிஸ் பின்ஷர், கடந்த புதன்கிழமை இரவுநேர கேளிக்கை விடுதியில் இரண்டு ஆண்களிடம் பாலியல் ரீதியில் அநாகரிகமாக செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து கிறிஸ் கட்சியின் துணை அமைப்பாளர் பதவியில் இருந்து விலகினார்.
எனினும் கிறிஸ் மீது பிரதமர் பொறிஸ் ஜோன்சன் சரியான நேரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து நிதி அமைச்சர் ரிஷி சுனக், சுகாதாரத்துறை அமைச்சர் சஜித் ஜாவித் ஆகியோர் பதவி விலகினர்.
இதனையடுத்து சட்டத்துறை அமைச்சரான லாரா டிராட் குடும்ப நலத்துறை அமைச்சர் வில் குயின்ஸ் ஆகியோரும் தங்களது பதவியை விட்டு விலகினர்.
இந்த நிலையிலேயே பொறிஸ் ஜோன்சனும் கொன்சவேட்டிவ் தலைவர் பதவியில் இருந்து விலகும் தீர்மானத்தை எடுத்துள்ளதாக அறியமுடிகிறது.
