கல்லீரலில் பிரச்சினையா... உடனடி தீர்வு இதை மட்டும் சாப்பிடுங்கள்
கருவுற்ற கர்ப்பிணி பெண்கள் சத்தான, ஊட்டச்சத்து கொண்ட உணவுகளை சாப்பிட வேண்டும். அப்படி சாப்பிட்டால்தான் வயிற்றில் இருக்கும் குழந்தை ஆரோக்கியமாக வளரும்.
அந்த வகையில் கர்ப்பிணி பெண்கள் கொத்தமல்லியை உணவில் சேர்த்துக் கொண்டால் குழந்தைகளின் வளர்ச்சி நன்றாக இருக்கும். ஒவ்வொருவரும் கொத்தமல்லியை உணவில் சேர்த்துக் கொண்டு வந்தால், எலும்பு பிரச்சினை ஏற்படாது.
பற்கள், நரம்பு, தசைகளில் எந்த பாதிப்பும் ஏற்படாது. கல்லீரலில் உள்ள கொழுப்பை நீக்கும். உடலில் உள்ள தேவையற்ற நச்சுக்களை நீக்கி குடலை சுத்தம் செய்யும்.

தேவையான பொருட்கள்
கொத்தமல்லித்தழை – 4 கைப்பிடி
பூண்டு – 4 பல்
உப்பு – தேவைக்கேற்ப
எலுமிச்சை சாறு – 4 ஸ்பூன்
தண்ணீர் – தேவைக்கேற்ப
செய்முறை

முதலில் கொத்தல்லி நறுக்கி சுத்தம் செய்து, அதை நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள்.
அதனுடன், பூண்டு, சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
இந்த அரைத்த சாற்றை நன்றாக வடிக்கடி அதில் எலுமிச்சை சாற்றை பிழித்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்தி, அரை மணி நேரம் கழித்து இந்த பானத்தை குடிக்க வேண்டும்.
இப்படி தினமும் செய்து வந்தால் கல்லீரலில் தேவையற்ற கெட்ட நச்சுக்கள் வெளியேறிவிடும். வாயுத்தொல்லை ஏற்படாது. ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு குறையும்.