சலுகை வட்டியில் கடன் பெறவுள்ள தரப்பினர்: கிடைத்தது அமைச்சரவை அங்கீகாரம்
2024 ஆம் ஆண்டுக்கான நெல் கொள்வனவுக்கான மானிய வட்டி வீதத்தில் வங்கிகள் ஊடாக கடன் வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கி உள்ளது.
கடந்த ஜனவரி மாதம் முதலாம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், 2024 ஆம் ஆண்டு நெல் கொள்முதல் செய்வதற்கான சலுகை வட்டி விகிதத்தின் கீழ் வங்கிகள் மூலம் கடன் திட்டத்தை செயல்படுத்த 08-01-2024 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
நெல் கொள்வனவுக்காக சலுகை வட்டி வீதத்தின் கீழ், வங்கிகள் மூலம் கடன் வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக 2024.01.08 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
6,000 மில்லியன் கடன்
இதன்படி, பெரும்போகம் மற்றும் சிறுபோக நெற் கொள்வனவுக்காக ஏனைய அமைச்சுகள் மற்றும் அரச மற்றும் தனியார் வங்கிகளின் பிரதிநிதிகளுடன் திறைசேரியின் பிரதி செயலாளர் தலைமையில் குறித்த கடன் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
மேற்படி கலந்துரையாடலில் எட்டப்பட்ட உடன்படிக்கைகளின் பிரகாரம் 2024 ஆம் ஆண்டு நடுத்தர நெல் ஆலை உரிமையாளர்கள், நெல் களஞ்சியசாலை உரிமையாளர்கள் மற்றும் மொத்த நெல் கொள்வனவாளர்கள் பங்குபற்றும் வங்கி நிறுவனங்கள் ஊடாக 6,000 மில்லியன் ரூபா கடனை சலுகை வட்டியில் வழங்குவதற்கு நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சராக அதிபரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |