ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் புதிய மதிப்பீட்டு செயல்முறையின் கீழ், மாணவர்கள் 2029 ஆம் ஆண்டில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கு முகம் கொடுப்பார்கள் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அதன்படி, புலமைப்பரிசில் பரீட்சைக்கு முன்மொழியப்பட்ட புதிய முறையின் கீழ், மாணவர்கள் வகுப்பறைச் செயல்முறையிலிருந்து 30 சதவீத பரீட்சை மதிப்பெண்களைப் பெறுவார்கள். மற்றும் 2025 ஆம் ஆண்டின் முதலாம் தரத்தில் பாடசாலைக்குள் நுழையும் மாணவர்களின் வகுப்பு நடவடிக்கைகள் ஐந்து ஆண்டுகளுக்கு மதிப்பீடு செய்யப்படும்.
அதனையடுத்து, 2029 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையை எதிர்கொள்ளும் போது அவர்கள் பெறும் புள்ளிகளில் 30 சதவீதத்திற்கு இது பங்களிப்பதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
புதிய மதிப்பீட்டு முறை
புதிய மதிப்பீட்டு முறையின் கீழ், 2025 ஆம் ஆண்டு முதல் புலமைப்பரிசில் பரீட்சையில் 30 வீதமான மதிப்பெண்கள் 4-5 தரங்களில் பெற்ற கல்வி மூலம் வழங்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த (Susil Premajayantha) அண்மையில் தெரிவித்திருந்தார்.
மேலும், புதிய உலகின் கல்விப் போக்குகளை கருத்தில் கொண்டு இந்த கல்வி முறை திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |