உள்ளூராட்சி தேர்தலை நடத்த அரசாங்கம் பின்னடிப்பு
Election Commission of Sri Lanka
Sri Lanka Government Gazette
Election
Local government Election
Sri Lankan local elections 2023
By Vanan
இலங்கையில் நடத்தப்படவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைமுறைகளை ஆரம்பிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் அரசாங்க அச்சகத்திற்கு இதுவரை அனுப்பப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் எஞ்சிய உறுப்பினர்களினால் கையொப்பமிடப்பட்ட வர்த்தமானி அரச அச்சகத்திற்கு இதுவரை கிடைக்கவில்லை என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் மார்ச் மாதம் 9ஆம் திகதி நடைபெறலுள்ளது.
இது தொடர்பில் ஆணைக்குழு ஏற்கனவே அறிவித்திருந்த போதிலும், அது தொடர்பான வர்த்தமானி இதுவரை வெளியிடப்படவில்லை.
எனினும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணிகள் அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அரசாங்க அச்சகம் முன்னர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



ரணிலின் கைதும் இந்தியாவின் மௌனத்திற்கான பின்புலமும் 1 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி