உள்ளூராட்சி தேர்தலின் வெற்றி எங்களுடையது - சசிந்திர ராஜபக்ச பகிரங்கம்
தேர்தல் ஒன்று நடந்தால் 200 வீதம் நாம் அதில் வெற்றி பெறுவோம் என நீர்ப்பாசன இராஜாங்க அமைச்சர் சசிந்திர ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற நீர்ப்பாசன அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலின் போதே குறித்த கருத்தினை தெரிவித்தார்,
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நீதிமன்றம், தேர்தல் ஒன்றை நடத்துவதற்கான பணத்தை தேர்தல் ஆணைக்குழுவுக்கு வழங்குமாறு தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் அரசாங்கம் மற்றைய திணைக்களங்களுடன் கலந்தாலோசித்து திகதி ஒன்றை அறிவிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சி தோற்று விடுவார்கள்
இந்தத் தேர்தலானது உண்மையிலேயே அரசாங்கத்துக்கு தான் முக்கியமானதாக கருதப்படுகின்றது. எதிர்க்கட்சிகளுக்கு இந்த தேர்தல் ஒரு அவசியமானது அல்ல. எதிர்க்கட்சியினர் தோற்று விடுவார்கள்.
ஆகவே எந்த நேரத்திலும் நாங்கள் இந்த தேர்தலை பிற்பேடுவதற்கான எந்தவிதமான அவசியப்பாடும் எங்களுக்கு இல்லை. ஆனால் தற்பொழுது நாட்டில் இருக்கின்ற பொருளாதார நெருக்கடியை பார்க்கும்போது தேர்தல் ஒன்று நடத்தலாமா வேண்டாமா என்பது சவலாகவுள்ளது.
நாட்டு மக்களின் அத்தியாவசியமான பிரச்சினை விசேடமாக சமுர்த்தியை அவர்களுடைய ஆதாய மார்க்கங்களை இடைநிறுத்தி தேர்தலை நடத்த கூறுவதற்கு அரசாங்கம் என்ற ரீதியில் எமக்கு முடியாது.
அரசியல்வாதிகளின் கதைகள்
நூற்றுக்கு 200 வீதம் நம்பிக்கை உள்ளது மக்கள் வாக்களிப்பது வேலை செய்பவர்களுக்கு மட்டும். கதைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு இல்லை, ஒரு காலமும் எந்த ஒரு திட்டங்களும் செய்யாதவர்களுக்கு மக்கள் வாக்களிப்பார்கள் என்று நம்புகிறார்கள். அவர்களை மக்கள் நம்புவார்கள் என்பதில் எமக்கு பிரச்சினை இல்லை.
ஆனால் நாங்கள் வேலை செய்து மக்கள் எதிர்பார்த்த வேலை திட்டங்களை அரைவாசியில் செய்து கொண்டிருக்கும் போது எல்லாம் செய்தோம் என்று என்னால் கூற முடியாது.
எதிர்கட்சி கூறுவது போன்று பொய் கூறமுடியாது. வேலைகளை இடைநடுவே நிறுத்திய அரசியல்வாதிகள் தான் இன்று இவ்வாறான கதைகளை கூறுகின்றார்கள். நாங்கள் வேலை செய்தோமோ செய்யவில்லை என்பதை பார்ப்பது மக்களுடைய கடமை நாங்கள் வேலை செய்திருக்கின்றோம்.
எந்தவித ஐயப்பாடும் இல்லை
நான் நினைக்கிறேன் இந்த நாட்டு மக்கள் நல்ல புத்திசாலிகள். வேலை செய்பவர்கள் யார் என்று நன்றாக அறிந்து உள்ளார்கள். இன்று மக்கள் பிழையான முடிவும் எடுக்க மாட்டார்கள். காரணம் மக்களை காட்டி ஆர்ப்பாட்டங்களை நடத்துவதன் மூலம் அதை மக்கள் எவ்வாறு பார்ப்பார்கள் என்று எனக்கு தெரியாது.
ஆனால் எங்களது கட்சியை பொறுத்தவரையில் நாங்கள் தேர்தலுக்கு எந்த விதமான முன்னேற்ற நடவடிக்கை எடுக்கவில்லை. தேர்தல் பிரச்சாரங்களிலும் ஈடுபடவில்லை
இந்த நாட்டில் உள்ள புத்திசாலி மக்கள் யாருக்கு வாக்களிக்க உள்ளார்கள் என்பது எங்கள் வெற்றியின் மூலம் வெளிப்படுத்துவோம்.” என தெரிவித்துள்ளார்.
