பிரசாரத்தில் தகாத முறைக்கு உட்படுத்தப்பட்ட சிறுமி : வேட்பாளர் அதிரடி கைது
சிறுமி ஒருவரை தகாத முறைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் வேட்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கை நேற்று (03) இடம்பெற்றுள்ளது.
லக்கல பிரதேச சபைக்கு போட்டியிடும் வேட்பாளர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
தகாத முறை
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், “குறித்த நபர் நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தலில் லக்கல பிரதேச சபைக்கு போட்டியிடவுள்ளார்.
இந்தநிலையில், தேர்தலுக்காக குறித்த நபர் வீடு வீடாகச் சென்று பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
இவ்வாறு, பிரசாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது வீடு ஒன்றினுள் சட்டவிரோதமாக நுழைந்து சிறுமி ஒருவரை தகாத முறைக்கு உட்படுத்தியுள்ளார்.
இதையடுத்து, பாலியல் வன்கொடுமை நடந்ததாக காவல்துறையினருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டதாக லக்கல காவல்துறையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
You May Like This
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
