உள்ளூராட்சிமன்ற தேர்தலை தடுக்கக் கோரிய மனு தொடர்பில் சற்று முன்னர் நீதிமன்றின் அதிரடி உத்தரவு!
இலங்கையில், உள்ளூராட்சி மன்றத் தேர்தலை திட்டமிட்டவாறு நடத்துமாறு தேர்தல் ஆணைக்குழுவுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாட்டில் பாரிய பொருளாதார நெருக்கடி நிலவும் நிலையில், உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதால் நாட்டுக்கோ, பொதுமக்களுக்கோ எந்தப் பயனும் ஏற்படாது எனத் தெரிவித்து ஓய்வுபெற்ற இராணுவ கேணல் டபிள்யூ.எம்.ஆர். விஜேசுந்தரவினால் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கின் தீர்ப்பு
அதனையடுத்து அது தொடர்பில் இடம்பெற்ற வழக்கு விசாரணைகளின் தொடர்ச்சியாக இன்றைய தினமும் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன் போதே தேர்தலை திட்டமிட்டவாறு நடத்த வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தேர்தலை தடுக்க தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உத்தரவிடுமாறு கோரிக்கை விடுத்து, அண்மையில், ஓய்வுபெற்ற இராணுவ கேணல் டபிள்யூ.எம்.ஆர். விஜேசுந்தரவினால் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இடைநிறுத்த உத்தரவிடுமாறு கோரி ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
