வடக்கு கிழக்கில் அநுர அரசுக்கு தோல்வி… தமிழர்கள் புகட்டிய பாடம்

Sri Lankan Tamils Anura Kumara Dissanayaka Local government election Sri Lanka 2025
By Theepachelvan May 07, 2025 05:59 PM GMT
Theepachelvan

Theepachelvan

in கட்டுரை
Report

நடைபெற்ற உள்ளூர் அதிகார சபைகள் தேர்தலின் முடிவுகள், இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணத்தில் முக்கிய செய்தியொன்றைச் சொல்லி இருக்கின்றது. தமிழ் மக்கள் கடந்த நாடாளுமன்றத் தேர்தல் வாயிலாக வழங்கிய வாய்ப்பு, இலங்கையிலும் சர்வதேச அளவிலும் கவனிக்கத் தக்க விடயமாக மாறியிருந்தது.

ஆனால் அதனைப் பிழையாக அநுர அரசு பயன்படுத்திய நிலையில், தமிழ் மக்களின் இருப்பை இல்லாது செய்து கடந்த கால ராஜபக்ச மற்றும் ரணில் அரசுகளுக்கு நிகரான வகையில் இயங்கியமை காரணமாகவே இம்முறை தேர்தலில் அரசு தோல்வியைத் தழுவியுள்ளது. இதன் வழியாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ளே விட்டு தாக்கும் யுத்த முறைக்கு நிகரான அரசியல் போராட்டத்தை ஈழ மக்கள் நடாத்தியுள்ளனர்.

உள்ளுர் அதிகார சபைத் தேர்தல் 2025

இலங்கையில் உள்ளுர் அதிகார சபைக்கான தேர்தல் கடந்த மே 06ஆம் நாளன்று இடம்பெற்றது. 341 உள்ளூராட்சி சபைகளில் 28 மாநகரசபைகள், 36 நகரசபைகள், 275 பிரதேச சபைகள் உள்ளிட்ட 339 உள்ளுராட்சி சபைகளுக்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் வகையில் இந்தத் தேர்தல் இடம்பெற்றது. இத் தேர்தலில் ஆளும் கட்சியான தேசிய மக்கள் சக்தி  4,503,930 வாக்குகளைப் பெற்று, இலங்கை முழுவதும் 3927 இடங்களைப் பெற்றுள்ளது. அதிகாரபூர்வ முடிவுகளின்படி, 23 மாநகர சபைகள், 26 நகர சபைகள் மற்றும் 217 பிரதேச சபைகள் உட்பட 266 உள்ளூராட்சி மன்றங்களில் தேசிய மக்கள் கட்சி முன்னிலை பெற்றுள்ளது.  

வடக்கு கிழக்கில் அநுர அரசுக்கு தோல்வி… தமிழர்கள் புகட்டிய பாடம் | Local Government Election Tamil Peoples

ஐக்கிய மக்கள் சக்தி 2,258,480 வாக்குகளுடன் 1767 இடங்களைப் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளபோதும் ஆளும் கட்சிக்கு அடுத்த நிலையில் அதிக உள்ளூராட்சி மன்றங்களை கைப்பற்றிய கட்சியாக இலங்கை தமிழ் அரசு கட்சி இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. வடக்கு கிழக்கு மாகாணங்களில் போட்டியிட்ட இலங்கை தமிழ் அரசு கட்சி 307,657 வாக்குகளைப் பெற்று 377 இடங்களைக் கைப்பற்றி உள்ளது. அத்துடன் தமிழரசு கட்சி 37 சபைகளில் முன்னிலை பெற்றுள்ளதுடன் அதில் 03 மாநகர சபைகள், 01 நகர சபை மற்றும் 33 பிரதேச சபைகள் என்பன உள்ளடங்குகின்றன. யாழ் தேர்தல் மாவட்டத்தில் 79 ஆசனங்களைக் கைப்பற்றி இரண்டு சபைகளில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி முன்னிலை பெற்றுள்ளது.

 வடக்கு கிழக்கில் அநுர அரசுக்கு அடி

கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது வடக்கு கிழக்கில் அதிகளவான ஆசனங்களை இன்றைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கா பெற்றிருந்தார். வடக்கு கிழக்கு தமிழ் தேசிய கட்சிகள் மீதான அதிருப்தி காரணமாக தமிழ் மக்கள் கொண்டிருந்த கோபம் அநுர அரசுக்கு சாதகமான நிலையை ஏற்படுத்தியது. இதனால் யார் எனத் தெரியாதவர்களும் தகுதியற்றவர்களும் தமிழ் மக்களின் வாக்குகளால் வெற்றி பெற்று எம்பிக்கள் ஆகினர். இது கடந்த ஆறு மாத காலத்தில் தமிழ் மக்களை இன்னமும் மோசமான நிலைமைக்குத் தள்ளியது. அத்தகைய கோமாளித்தனமான அரசியல் பிரதிநிதிகளின் கோமாளித்தனமான பேச்சுக்களால் சர்ச்சைகளும் நகைப்புமே விஞ்சின.

வடக்கு கிழக்கில் அநுர அரசுக்கு தோல்வி… தமிழர்கள் புகட்டிய பாடம் | Local Government Election Tamil Peoples

  அத்துடன் கடந்த காலத்தில் இருந்த அரசுகளைப் போலவே அநுர அரசும் தமிழ் மக்களை ஏமாற்றும் வகையிலான செயற்பாடுகளைத் தொடர்ந்தது. தமிழ் மொழிக்கு இரண்டாம் இடம் வழங்காமல் முதல் இடத்தை வழங்குவோம் என கடந்த காலத்தில் கூறிய ஜேவிபி ஆனையிறவு உப்புக்கு சிங்களத்தில் பெயர் சூட்டியது. அமைச்சர் பிமல் ரத்நாயக்கா, உப்பில் பெயரைப் பார்க்காமல் ருசியைப் பாருங்கள் என்று எகத்தாளமாகவும் அதிகாரமாகவும் வடக்கில் வந்துபேசினார். இன்றைய ஜனாதிபதி அனுர, கடந்த காலத்தில் பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிராகப் போராடியவர்.  ஆனால் தனது ஆட்சியில் அரசியல் கைதிகளை விடுவிக்காமல் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்காமல் தனது ஆட்சியைத் தொடர்ந்தார்.

இதுவும் பேரினவாத ஆட்சியா?

தமிழ் மக்கள் நாடாளுமன்றத் தேர்தலின் வாயிலாக அநுர அரசுக்கு ஒரு வாய்ப்பினை வழங்கி இருந்தனர். ஆனால் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி வடக்கு கிழக்கில் வந்து சண்டித்தனங்களை செய்வதும், பேரினவாத அரசியலை முன்னெடுப்பதுமென ஏமாற்று அரசியலைத் தொடர்வதுமாக தேசிய மக்கள் சக்தி என்ற முகமூடியை அணிந்துள்ள ஜேவிபி அரசு தனது மெய்யான முகத்தை காண்பித்தது. தமிழ் மக்கள் நாடாளுளமன்றத் தேர்தலின் வாயிலாக தேசிய மக்கள் சக்திக்கு சந்தர்ப்பத்தை வழங்கி புலிகளின் இறங்கவிட்டுத் தாக்கும் பாணியில் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் அடியை, அனுபவத்தை வழங்கி பாடத்தை புகட்டியுள்ளனர் என்று இதனை எடுப்பதா?

வடக்கு கிழக்கில் அநுர அரசுக்கு தோல்வி… தமிழர்கள் புகட்டிய பாடம் | Local Government Election Tamil Peoples

 கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு கிழக்கு மக்கள் அநுர அரசுக்கு ஆதரவை வழங்கியபோது, அதனை தமிழ் தேசியத்தின் தோல்வியாக ஜேவிபியின் பொதுச்செயலாளர் ரிவின் சில்வா, முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச போன்றவர்கள் சித்திரிக்க முற்பட்டனர். அத்துடன் அவ்வாறு தமக்கு வழங்கப்பட்ட ஆதரவைக் கொண்டு தமிழர் தேசத்தில் தமிழர்களுக்கு எதிராக கடந்த காலத்தில் ராஜபக்ச போன்ற இனவாதிகள் மேற்கொண்ட அரசியலைத் தொடர முற்பட்டமையின் தோல்வியாகவே உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் வடக்கு கிழக்கில் தேசிய மக்கள் சக்தி தோல்விகளைத் தழுவிக் கொண்டுள்ளது.

தமிழ் தலைவர்களுக்கும் எச்சரிக்கை

 அத்துடன் இந்தத் தேர்தல் தமிழ் தலைவர்களுக்கும் மக்கள் பாடத்தை புகட்டியுள்ளனர். தமிழ் தலைமைகள் ஒன்றுபட்டு இயங்க வேண்டும் என்பதனையும் தன்னல அரசியலுக்காக, தலைமைத்துவப் போட்டிக்காக மோதிக்கொண்டால் தமிழ் தலைவர்களுக்கே தோல்வியைக் கொடுத்து பாடத்தைப் புகட்ட நேரிடும் என்பதும் இதில் உணர்ந்துகொள்ள வேண்டியதாகும். கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கும் உள்ளுராட்சித் தேர்தலுக்கும் இடையில் இன்னொரு விடயமும் உணர்த்தப்பட்டுள்ளது.

வடக்கு கிழக்கில் அநுர அரசுக்கு தோல்வி… தமிழர்கள் புகட்டிய பாடம் | Local Government Election Tamil Peoples

சிங்கள மக்களுக்கும் சிங்கள தரப்புக்களுக்கும் ஈழத் தமிழர்கள் எதிரானவர்களல்லர் என்பதும் ஆகும். ஆனால் பேரினவாத ஒடுக்குமுறைக்கு ஈழ மண்ணில் இடமில்லை என்பதும் உணர்த்தப்பட்ட செய்தியாகும். இனத்தின்  உரிமைக்காகவும் விடுதலைக்காகவும் இரத்தம் சிந்தி உயிர்களை தியாகம் செய்து உன்னதமான விடுதலைப் போராட்டம் நடந்த மண்ணில் நேர்மையான அரசியலைத் முன்னெடுக்க வேண்டும் என்பதையும் எமது உயிருள்ள நிலம் உணர்த்தியிருக்கிறது. 

வடக்கு கிழக்கு மக்களின் ஆணை : நிரந்தர அரசியல் தீர்வுக்கு ஆதரவு – இரா. சாணக்கியன்

வடக்கு கிழக்கு மக்களின் ஆணை : நிரந்தர அரசியல் தீர்வுக்கு ஆதரவு – இரா. சாணக்கியன்

அநுர அரசின் ஆர்ப்பாட்டம் முடிவிற்கு வந்தது : தேர்தல் முடிவு குறித்து எதிரணி எம்.பி மதிப்பீடு

அநுர அரசின் ஆர்ப்பாட்டம் முடிவிற்கு வந்தது : தேர்தல் முடிவு குறித்து எதிரணி எம்.பி மதிப்பீடு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


பொறுப்பு துறப்பு!

இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Theepachelvan அவரால் எழுதப்பட்டு, 07 May, 2025 அன்று ஐபிசி தமிழ் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் ஐபிசி தமிழ் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

ReeCha
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

18 Nov, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, துணுக்காய்

19 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி, Rolleboise, France

21 Nov, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, கட்டுவன், முன்சன், Germany, Toronto, Canada, Peterborough, Canada

07 Dec, 2021
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, வவுனியா

22 Nov, 1999
மரண அறிவித்தல்

அனலைதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada

21 Nov, 2025
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை மேற்கு

23 Nov, 2010
மரண அறிவித்தல்

வவுனியா, Scarborough, Canada, Oshawa, Canada

16 Nov, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Nov, 2025
மரண அறிவித்தல்

கருங்காலி சோலை, Bümpliz, Switzerland

21 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், Vancouver, Canada

22 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், Pickering, Canada

03 Dec, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
மரண அறிவித்தல்

பொன்னாலை, Deuil-la-Barre, France

18 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைப்பந்தி, London, United Kingdom

22 Nov, 2024
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, Toronto, Canada

19 Nov, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
மரண அறிவித்தல்

பெரிய கல்லாறு, London, United Kingdom

11 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உடுப்பிட்டி, லுசேன், Switzerland

22 Nov, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், திருகோணமலை, கொழும்பு

22 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், அப்புத்தளை

02 Dec, 2024
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
மரண அறிவித்தல்

செட்டிக்குளம் வவுனியா, Etobicoke, Canada

18 Nov, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, யாழ்ப்பாணம், கொழும்பு, Montreal, Canada, Saint-Eustache, Canada

14 Nov, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

05 Nov, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2025