உள்ளூராட்சி தேர்தல் திகதி : யாழில் அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு
உள்ளூராட்சி மன்ற தேர்தலை ஏப்ரல் இரண்டாவது வாரத்திலோ அல்லது 4 ஆவது வாரத்திலோ நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழு ஏற்பாடு செய்யும் என அரச தரப்பு தெரிவித்துள்ளது.
குறித்த விடயத்தை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் (Jaffna) நேற்று (26.1.2025) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
உள்ளூராட்சி மன்ற தேர்தல்
அத்துடன், உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கான சட்டமூலத்தை மீளாய்வு செய்வதற்கு அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, யாழ்ப்பாணத்திற்கு (Jaffna) எதிர்வரும் 31 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) விஜயம் செய்யவுள்ளதாகவும் இதன்போது ஜனாதிபதி அநுரகுமார யாழ். மாவட்ட செயலகத்தில் விசேட மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளதாகவும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
You may like this