அநுர வந்த ஜெட் விமானம் - வெடித்த சர்ச்சை - விளக்கும் அரசு
புதிய இணைப்பு
வியட்நாமுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க விசேட ஜெட் விமானம் மூலம் இன்று நாடு திரும்பியிருந்தார்.
அதிசொகுசு ஜெட் விமானமான Embraer Legacy 600 மூலம் ஜனாதிபதி பயணித்தது என்ன அடிப்படையில்? அதற்கு செலவளித்தது யார் என்று நெட்டிசன்கள் கேள்விகளை எழுப்பி விமர்சித்திருந்தனர்.
எவ்வாறாயினும் தேர்தல் வாக்களிப்புக்கு வரவேண்டி இருந்ததால் ஜனாதிபதிக்கான இந்த விமானத்தை வியட்னாம் அரசே ஒழுங்குபடுத்தி அனுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதலாம் இணைப்பு
நடைபெற்றுக் கொண்டிருக்கும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தனது வாக்கினை பதிவு செய்துள்ளார்.
கொழும்பு பஞ்சிகாவத்த அபே சுந்தரராமய விகாரையில் அவர் தனது வாக்கினை அளித்துள்ளார்.
வெசாக் விழாவில் கலந்து கொள்வதற்காக இன்று (06) காலை வியட்நாமில் (Vietnam) இருந்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இலங்கைக்குத் திரும்பி, நடைபெற்றுக்கொண்டிருக்கும் தேர்தலில் வாக்களித்தார்.
தனது குடியுரிமைக் கடமையை நிறைவேற்றுவதற்காக, தரையிறங்கிய சிறிது நேரத்திலேயே ஜனாதிபதி வாக்களிப்பதற்கு வருகை தந்ததாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
