அதிரடியாக கைது செய்யப்பட்ட வேட்பாளர்கள்
புதிய இணைப்பு
ஏறாவூர், வாழைச்சேனை பிரதேசங்களில் தேர்தல் நடவடிக்கைக்கு இடையூறு விளைவித்த ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளர்கள் உட்பட 3 பேரை இன்று செவ்வாய்க்கிழமை (6) கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
வாழைச்சேனை காவல்துறை பிரிவிலுள்ள ஓட்டமாவடி அந்நூர் பாடசாலையில வாக்களிப்பு நிலையத்திற்கு அருகில் ஒரு கட்சியின் வேட்பாளர் அவரது ஆதரவாளர் உட்பட இருவர் வாக்காளர்கள் சுதந்திரமாக வாக்களிக்க விடாது இடையூறு விளைவித்ததை அடுத்து வேட்பாளர் மற்றும் ஆதரவாளரை காவல்துறையினர் கைது செய்தனர்.
அதேவேளை ஏறாவூர் காவல்துறை பிரிவிலுள்ள மீராங்கேணி வாக்களிப்பு நிலையத்திற்கு சென்ற ஜ.தே.கட்சி வேட்பாளர் ஒருவர் சென்று தனது கட்சிக்கு வாக்களிக்குமாறு கோரி வாக்களிப்புக்கு இடையூறு விளைவித்த வேட்பாளரை கைது செய்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக அந்தந்த காவல் நிலைய காவல்துறையினர் தெரிவித்தனர்
முதலாம் இணைப்பு
விவசாயக் கடன்களைத் திருப்பிச் செலுத்தாத குற்றச்சாட்டில் வேட்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அனுராதபுரம் , ஹொரவ்பொத்தானை பிரதேச சபைக்கு போட்டியிடும் வேட்பாளர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர் தேகெதிபொத்தான பகுதியைச் சேர்ந்த 52 வயதுடையவர் என ஹொரவ்பொத்தானை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
விவசாயக் கடன்
குறித்த வேட்பாளர் 2023 இல் எடுத்த 29,500.00 ரூபாய் விவசாயக் கடனைத் திருப்பிச் செலுத்தாத காரணத்தினால் நீதிமன்ற உத்தரவுக்கமைய இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹொரவ்பொத்தானை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
