அதிகாரபூர்வமாக நிறைவடைந்த வாக்குப்பதிவு

Jaffna Election Local government Election
By Independent Writer May 06, 2025 10:47 AM GMT
Independent Writer

Independent Writer

in அரசியல்
Report

புதிய இணைப்பு

உள்ளூராட்சித் தேர்தலின் வாக்குப்பதிவு ஓரளவு குறைந்த வாக்குப்பதிவோடு அதிகாரபூர்வமாக நிறைவடைந்தது.

அதன்படி, இன்று காலை 7.00 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 4.00 மணிக்கு நிறைவடைந்தது.

வாக்கு எண்ணும் நடவடிக்கை விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

யாழ். மாவட்டத்தில் பதிவான வாக்கு சதவீதம் எவ்வளவு தெரியுமா?

நடைபெற்றுக்கொண்டிருக்கும் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக யாழ் மாவட்டத்தில் இதுவரை 34 சதவீத வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று (06) காலை 7மணி முதல் மதியம் 01 மணி வரையான காலப்பகுதியில் வாக்களிப்பு நிலவரம் இவ்வாறு அமைந்துள்ளது.

அத்துடன் தேர்தல் மாவட்டங்கள் பலவற்றில் வாக்குப்பதிவு வீதம் 40% ஐ தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், இதுவரை பதிவான வாக்குப்பதிவு வீதம் பின்வருமாறு,

மன்னார் - 47%,  பதுளை - 48%,  மொனராகலை - 43%,  திகாமடுல்ல - 41% , கேகாலை - 40%,  அநுராதபுரம் - 40%,  கிளிநொச்சி -39%,  மட்டக்களப்பு - 38%,  புத்தளம் - 38%,  இரத்தினபுரி - 37%, கம்பஹா - 36 %,  யாழ்ப்பாணம் - 34% என பதிவாகியுள்ளது.

ஐந்தாம் இணைப்பு

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக யாழ். மாவட்டத்தில் இதுவரை 18 சதவீத வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இன்று (06) மதியம் 12 மணி வரையான நிலவரப்படி, தேர்தல் மாவட்டங்கள் பலவற்றில் வாக்குப்பதிவு வீதம் 30% ஐ தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை பதிவாக வாக்குப்பதிவு வீதம் பின்வருமாறு, நுவரெலியா - 30 % பதுளை - - 36 % மொனராகலை - 32 % அனுராதபுரம் - 30 % யாழ்ப்பாணம் - 18 % மன்னார் - 40 %

வவுனியா - 39.5 % திகாமடுல்ல - 31% கம்பஹா - 20 % மாத்தறை - 42 % களுத்துறை 20 % பொலனறுவை - 34 % கொழும்பு - 28 % புத்தளம் - 36 % காலி - 35 % இரத்தினபுரி - 30 % அம்பாந்தோட்டை - 19 % கிளிநொச்சி - 22 % மாத்தளை - 25 % கேகாலை - 33 % கண்டி - 21 % மட்டக்களப்பு - 23 % குருநாகல் - 30 % திருகோணமலை - 36%

நான்காம் இணைப்பு

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக யாழ். மாவட்டத்தில் இதுவரை 18 சதவீத வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இதேவேளை, யாழ். மாவட்டத்தில் சுமூகமான முறையில் வாக்களிப்பு இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மூன்றாம் இணைப்பு

இலங்கையில் 339 உள்ளூராட்சி மன்றங்களுக்காக 8,287 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு இன்று (06) காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகி இடம்பெற்று வருகிறது.

இதன்படி இன்று காலை 09.00 மணி வரையான காலப்பகுதியில் சில தேர்தல் மாவட்டங்களில் அளிக்கப்பட்ட வாக்குகளின் சதவீதம் பின்வருமாறு,

திகாமடுல்ல - 12% நுவரெலியா - 20% யாழ்ப்பாணம் - 6% வவுனியா - 31.5% மன்னார் - 12% அம்பாறை - 12.5% அநுராதபுரம் - 10% - 15% மொனராகலை - 15% பதுளை - 20% கேகாலை - 11%

வங்கி விடுமுறை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

வங்கி விடுமுறை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

இரண்டாம் இணைப்பு

ஆரம்பமாகியுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு, இதுவரை உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை கிடைக்காதவர்கள் இருந்தாலும், அவர்கள் வாக்களிப்பு நிலையங்களில் தமது வாக்கை செலுத்துவதற்கு எவ்வித தடையும் இல்லை என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க (Saman Sri Ratnayake) தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதுவரை உத்தியோகபூர்வ வாக்களார் அட்டை கிடைக்காதவர்கள் இருந்தால் இன்று உபதபால் அலுவலகங்கள் திறந்திருக்கும் எனவும் அங்கு சென்று தமது வாக்காளர் அட்டையை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.  

வாக்களிப்பு நிலையங்கள் முன் பிரச்சாரத்தில் ஈடுபடும் வேட்பாளர்கள் - பொதுமக்கள் விசனம்

வாக்களிப்பு நிலையங்கள் முன் பிரச்சாரத்தில் ஈடுபடும் வேட்பாளர்கள் - பொதுமக்கள் விசனம்

முதலாம் இணைப்பு

உள்ளூராட்சி மன்றங்களுக்கான 8,287 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு சற்றுமுன்னர் 13,759 வாக்களிப்பு மத்திய நிலையங்களில் ஆரம்பமானது.

அதிகாரபூர்வமாக நிறைவடைந்த வாக்குப்பதிவு | Local Government Election 2025 Today

இன்று (06) காலை 7.00மணிக்கு ஆரம்பமான வாக்களிப்பு நடவடிக்கைகள் மாலை 4.00 மணி வரை இடம்பெறும்.

வாக்குப்பதிவு மாலை 4:00 மணி வரை நடைபெறவுள்ள நிலையில், வாக்குப்பதிவு முடிவடைந்த பின்னர், 5,783 மத்திய நிலையங்களில் வாக்கு எண்ணும் பணிகள் மேற்கொள்ளப்படும்.

வாக்களிக்க எடுத்து செல்ல வேண்டும்

339 உள்ளூராட்சி மன்றங்களுக்காக இந்தத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக 1 கோடியே 71 இலட்சத்து 56,338 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

அதிகாரபூர்வமாக நிறைவடைந்த வாக்குப்பதிவு | Local Government Election 2025 Today

இந்த முறை தேர்தலில், 49 அரசியல் கட்சிகள் மற்றும் 257 சுயேட்சைக் குழுக்களிலிருந்து 75,589 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இதன்படி தேசிய அடையாள அட்டை, வாகன அனுமதி பத்திரம் மற்றும் செல்லுபடியாகும் கடவுச்சீட்டு ஆகியவற்றை வாக்களிக்கும் போது எடுத்து செல்ல வேண்டும்.

தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட தற்காலிக அடையாள அட்டை, தேர்தல் ஆணையத்தால் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்ட தற்காலிக அடையாள அட்டை போன்றவற்றில் ஏதாவது ஒன்றையும் பயன்படுத்த முடியும்.

வாக்குகள் நிராகரிக்கப்படும்

அத்துடன், வாக்குச்சீட்டில் கட்சிகளின் பெயர்களுக்கு எதிரே கட்சிகளின் சின்னங்களும் சுயேச்சைக்குழுக்களின் பெயர்களுக்கு எதிரே சுயேச்சைக் குழுக்களின் சின்னங்களும் இருக்கும், அதற்கு எதிராக வெற்றுக்கட்டம் இருக்கும், அதில் புள்ளடி (X) இடவேண்டும்.

அதிகாரபூர்வமாக நிறைவடைந்த வாக்குப்பதிவு | Local Government Election 2025 Today

உங்களிடம் விருப்பமான வேட்பாளர் இருப்பினும் வாக்குகள் கட்சிகள் அல்லது குழுக்களுக்கு மட்டுமே அளிக்கப்படும் தனிப்பட்ட வேட்பாளர்களுக்கு அல்ல. உள்ளாட்சித் தேர்தல் வேட்பாளர்களுக்கு நேரடியாக வாக்களிக்க அனுமதிப்பதில்லை என்பதை அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

தவறாகக் குறிக்கப்பட்ட வாக்குகள் நிராகரிக்கப்படும். வாக்குச்சீட்டில் எழுதவோ, சித்திரம் கீறவோ, கிறுக்கவோ, எண்ணங்களை எழுதவோ, பெயர்களை எழுதவோ வேண்டாம். புள்ளடி (X) இடப்படாத எந்தவொரு வாக்குச்சீட்டும் நிராகரிக்கப்படும்.

வாக்கு எண்ணும் பணிகள் 

வாக்குப்பதிவு மையங்களில் வாக்கு எண்ணும் பணிகள் நடைபெறும், அங்கு ஒவ்வொரு பகுதி அல்லது வார்டுக்கான முடிவுகள் வாக்குச் சாவடியிலேயே அறிவிக்கப்படும்.

அந்தந்த உள்ளூர் அதிகாரிகளுக்கான ஒட்டுமொத்த முடிவுகளை தேர்தல் ஆணையம் வெளியிடும். 

திருகோணமலையில் ஆர்வத்துடன் வாக்களிக்கும் மக்கள்

திருகோணமலையில் ஆர்வத்துடன் வாக்களிக்கும் மக்கள்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்

அல்வாய், கம்பளை, Toronto, Canada, Markham, Canada

30 Apr, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, சூரிச், Switzerland

01 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, தொல்புரம், Aulnay-sous-Bois, France

01 May, 2025
மரண அறிவித்தல்

திருநாவலூர், Coventry, United Kingdom

17 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

19 Apr, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2024
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, தெஹிவளை, வெள்ளவத்தை

03 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Edmonton, Canada, Toronto, Canada

05 May, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, சிலாபம், கொழும்பு, St. Gallen, Switzerland

07 May, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரையூர், பருத்தித்துறை

07 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, சிட்னி, Australia

06 May, 2015
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Herdecke, Germany

04 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, ஏழாலை, Harrow, United Kingdom

04 May, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், Buchs, Switzerland

18 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இறக்குவானை, கந்தர்மடம், யாழ்ப்பாணம்

07 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், கண்டி

28 Apr, 2023
மரண அறிவித்தல்

நல்லூர், London, United Kingdom

30 Apr, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, வண்ணாங்குளம்

04 May, 2010
15ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, சொலோதென், Switzerland

03 May, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இலங்கை, கொழும்பு, Geneva, Switzerland

04 May, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, New Malden, United Kingdom

29 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024