இது வெறும் ஆரம்பம்...மீண்டும் நம்பிக்கையை கட்டியெழுப்புவோம் : நாமல் பகிரங்கம்
இது வெறும் ஆரம்பமே, உண்மையான தலைமையின் மீதான நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்பவும் மீட்டெடுக்க நாங்கள் தொடர்ந்து பணியாற்றுவோம் என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தெரிவித்துள்ளார்.
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகளை அடுத்து அவர் தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவொன்றை இட்டு இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அந்தபதிவில், “கடந்த ஆறு மாதங்களில், சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) மீண்டும் ஒன்றிணைந்து, எங்கள் கொள்கைகளுக்கு உண்மையாக இருப்பதன் மூலம் உத்வேகம் பெற்றுள்ளது.
கொள்கை ரீதியான அரசியல்
சிலர் பொய்யான வாக்குறுதிகளை நம்பியிருந்தாலும், மக்களை முதன்மைப்படுத்தும் நேர்மையான, கொள்கை ரீதியான அரசியலுக்கு நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
Over the past six months, the SLPP has regrouped and gained momentum by staying true to our principles. While some rely on false promises, we remain committed to honest, principled politics that put the people first. Thank you to everyone who stood by us. This is just the…
— Namal Rajapaksa (@RajapaksaNamal) May 7, 2025
எங்களுடன் நின்ற அனைவருக்கும் நன்றி. இது வெறும் ஆரம்பம். உண்மையான தலைமையின் மீதான நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்பவும் மீட்டெடுக்கவும் நாங்கள் தொடர்ந்து பணியாற்றுவோம்“ என குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
