உள்ளூராட்சி தேர்தல் :களமிறங்கத் தயார் நிலையில் முப்படையினர்
நாளையதினம்(06) நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தல் வாக்களிப்பு நிலையங்களுக்கு அருகில் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்பட்டு சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.
தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளுக்காக 65,000 க்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.
தற்போது நாட்டில் சுமார் 73,000 காவல்துறை அதிகாரிகள் பணியாற்றி வருவதாகவும், அவர்களில் சுமார் எண்பது சதவீதம் பேர் தேர்தல் தொடர்பான பணிகளுக்காக ஈடுபடுத்தப்படுவதாகவும் அவர் கூறினார்.
தேர்தல் கடமையில் காவல்துறையினர்
பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 2337 காவல்துறை சிறப்புப் படை அதிகாரிகளும் 9906 சிவில் பாதுகாப்புப் படை அதிகாரிகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், தேவைப்பட்டால் அழைக்கப்படுவதற்கு முப்படைகளும் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
வாக்குச் சாவடிகளில் கடமைகளைச் செய்வதோடு மட்டுமல்லாமல், வாக்குச் சாவடிகளில் பாதுகாப்பு நோக்கங்களுக்காக நடமாடும் காவல்துறை ரோந்துப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
