ஜூன் நடுப்பகுதி வரை பயணத்தடையா? இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்
people
lockdown
shavendra silva
By Vanan
இலங்கையில் கொரோனா தொற்று அச்சம் காரணமாக விதிக்கப்பட்டுள்ள பயண தடை ஜூன் மாதம் நடுப்பகுதி வரை நீடிக்கப்படவுள்ளதாக வெளியான தகவலை இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா நிராகரித்துள்ளார்.
இலங்கையில் பயணத் தடையை தொடர்ந்தும் நீடிப்பது தொடர்பாக இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லையென அவர் குறிப்பிட்டார்.
இலங்கையில் கொரோனா தொற்று அச்சம் காரணமாக எதிர்வரும் 7 ஆம் திகதி வரை பயண தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த பயணத் தடையானது எதிர்வரும் 14 ஆம் திகதி வரை நீடிக்கப்படும் என ஊடகங்களில் செய்திகள் வெளியானது.
எனினும் எதிர்வரும் 14 ஆம் திகதி வரை பயணத் தடையை நீடிக்கப்படாது என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்