முல்லைத்தீவில் முடக்கப்பட்ட பகுதிகள் விடுவிப்பு
covid
lockdown
mullaitivu
By Vanan
முல்லைத்தீவு மாவட்டத்தில் முடக்கப்பட்ட 11 கிராம அலுவலர் பிரிவுகளும் விடுவிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலையில் ஏற்பட்ட கொரோனா கொத்தணியை தொடர்ந்து முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 9 கிராம அலுவலர் பிரிவுகளும், முள்ளியவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரண்டு கிராம அலுவலர் பிரிவுகளுமாக 11 கிராம அலுவலர் பிரிவுகள் கடந்த 17 முதல் முடக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டன.
குறித்த பகுதிகள் அனைத்தும் விடுவிக்கப்பட்ட பகுதிகளாக அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,
இன்று முதல் குறித்த பகுதிகள் முடக்க நிலையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்