லொஹான் ரத்வத்தவின் தனிப்பட்ட செயலாளரொருவர் சுட்டுக் கொலை
Sri Lanka Police
Kandy
Lohan Ratwatte
Sri Lanka
By Harrish
கண்டி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான லொஹான் ரத்வத்தவின் தனிப்பட்ட செயலாளரொருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக கண்டி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி பலத்த காயமடைந்த அவர் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இன்று (20.10.2024) உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கிச் சூட்டு சம்பவம்
குறித்த நபர் மஹய்யாவ பிரதேசத்திலுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சரின் இல்ல வளாகத்தில் காணப்படும் அலுவலக கட்டிடத்தில் வைத்து துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கண்டி காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

1ம் ஆண்டு நினைவஞ்சலி