லொஹான் ரத்வத்த இழப்பு கட்சிக்கு பெரும் பாதிப்பு - அலி சப்ரி
சிறைக்கைதிகளுக்கு ஹொரண பிரதேசத்தில் 200 ஏக்கரில் பாரிய சிறைச்சாலைச் ஒன்றை அமைப்பதற்கான திட்டத்தை சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சராக இருந்த மறைந்த லொஹான் ரத்வத்த நடைமுறைப்படுத்தியதாக முன்னாள் நிதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
நேற்று (15.08.2025) திடீரென்று தனியார் வைத்தியசாலையில் காலமான முன்னாள் அமைச்சர் லொஹான் ரத்வத்தவை பார்க்க சென்ற சந்தர்ப்பத்திலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர், “லொஹான் ரத்வத்தை ,தனக்கு கொடுத்த பதிவிகளை திறம்பட செய்து காட்டியவர்.அத்தோடு கண்டி மக்களுக்கும் பெரும் சேவை செய்துள்ளார்.

யாழ். போதனாக்கு பேரிழப்பு - சத்திர சிகிச்சை நிபுணர் சுதர்சன் திடீர் மறைவுக்கு சத்தியமூர்த்தி இரங்கல்
முன்னாள் இராஜாங்க அமைச்சர்
குறிப்பாக அவரின் குடும்பம் சட்டத்தரணி என்ற வகையில் எனக்கு அவர்களும் நெருக்கம் ஏற்பட்டதோடு அரசியல் ஈடுபாட்டின் போதும் அவருடன் நான் நெருக்கமாக பழகினேன்.
அவரின் இழப்பு அவர் சார்ந்த பொதுஜன பெரமுன கட்சிக்கு பெரும் பாதிப்பாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, மறைந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் (Lohan Rathwatte) இறுதிக்கிரியைகள் தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் லொஹான் ரத்வத்தவின் இறுதி கிரியைகள் எதிர்வரும் 17 ஆம் திகதி நடைபெற உள்ளதாக அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.
இன்று (15) இரவு முதல் மஹியாவில் உள்ள அன்னாரது இல்லத்தில் உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
அதற்கமைய, நாளை மறுதினம் மாலை 5 மணிக்கு கண்டியில் உள்ள நிட்டவெல குடும்ப மயானத்தில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் இறுதி கிரியைகள் இடம்பெறவுள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
