யாழ் இளைஞனிடம் பாரிய பண மோசடி : பிரித்தானிய புலம்பெயர் தமிழர் அதிரடியாக கைது
பிரித்தானியாவில் (UK) வேலை பெற்றுத் தருவதாக கூறி யாழ்ப்பாண (Jaffna) இளைஞன் ஒருவரிடம் பண மோசடி செய்த குற்றச்சாட்டில் புலம்பெயர் தமிழர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அந்தவகையில், கைதான நபர் அண்மையில் யாழ்ப்பாணம் வந்திருந்தவேளை, லண்டனில் உள்ள பல்பொருள் அங்காடியொன்றில் வேலை பெற்றுத் தருவதாக கூறி இளைஞனிடம் 80 இலட்சம் ரூபாய் பணத்தினை பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.
மேலும் தெரியவருகையில், பணத்தை பெற்றுக்கொண்ட சந்தேக நபர், இளைஞரை லண்டனுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை எடுக்காததால், சந்தேகம் கொண்ட இளைஞன் தனது பணத்தை மீள தருமாறு கோரியுள்ளார்.
மக்களுக்கு எச்சரிக்கை
எனினும், அந்த லண்டன் பிரஜை பணத்தை திருப்பித் தராததால் இளைஞன் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து, காவல்துறையினரால் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக, வெளிநாடுகளில் பிரஜாவுரிமை பெற்றவர்கள் வெளிநாடுகளில் வேலை பெற்றுத் தருவதாக யாழ்ப்பாண இளைஞர்கள், யுவதிகளை இலக்கு வைத்து பண மோசடியில் ஈடுபட்டுவரும் சம்பவங்கள் யாழ்ப்பாணத்தில் அதிகரித்து வருவதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.
மேலும், இது தொடர்பில் விழிப்பாக இருக்குமாறும் காவல்துறையினர் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |