உண்ணாவிரதத்தை கைவிட்டார் முருகன்! உறுதியளித்தது இந்திய அரசு
முன்னாள் இந்திய பிரதமர்ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தண்டணை வழங்கப்பட்டு பின்னர் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்ட நிலையில் திருச்சி சிறப்பு முகாமில் உள்ள முருகன் அங்கு தான் ஆரம்பித்த உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்டுள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று உச்ச நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட சாந்தன் முருகன் ராபர்ட் பயஸ் ஜெயக்குமார் ஆகியோர் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் முருகன் தன்னை முகாமிலிருந்து விடுவித்து லண்டன் அனுப்ப வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்துவந்தார்.
உடல்நிலை மோசம்
முகாமில் உண்ணாவிரதம் இருக்கும் தனது கணவரின் உடல்நிலை மோசமாகி வருவதால், அவரைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்கக் கோரி தலைமைச் செயலர் திருச்சி ஆட்சியர் காவல் ஆணையருக்கு முருகனின் மனைவி நளினி கடிதம் எழுதினார்.
இந்நிலையில், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் தனித் துணை ஆட்சியர் நஸிமுநிஷா முருகனிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
மேலும் லண்டன் செல்வதற்கான பாஸ்போர்ட் எடுக்க சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்துக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவாதம் அளித்ததையடுத்து முருகன் உண்ணாவிரதத்தை நேற்று முன்தினம் கைவிட்டார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |