பிரித்தானியா செல்ல உள்ளோருக்கு முக்கிய அறிவிப்பு..!
பிரித்தானியாவின் (United Kingdom) ஹீத்ரோ விமான நிலையத்தில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
விமான நிலையத்திற்கு அருகில் உள்ள மின்சார துணை நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக மின்சாரம் தடைபட்டு விமான சேவைகள் இடைநிறுத்தப்பட்டிருந்தது.
தீ விபத்தால் ஐரோப்பாவின் மிகவும் பரபரப்பான விமான நிலையமான ஹீத்ரோ முழுவதுமாக நேற்றைய தினம் மூடப்பட்டது.
முதல் விமான சேவைகள்
இதனால், நேற்று 1,300க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டு, சுமார் 200,000 பயணிகள் பாதிக்கப்பட்டனர்.
மின்சாரம் மீட்கப்பட்ட பின்னர், மார்ச் 21 அன்று மாலை முதல் விமான சேவைகள் படிப்படியாக மீண்டும் தொடங்கின.
இன்று முதல், விமான நிலையம் முழு அளவிலான சேவைகளை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,
ஆனால் அடுத்த சில நாட்களுக்கு குறிப்பிடத்தக்க தாமதங்கள் இருக்கலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா எயார்லைன்ஸ்
இதேவேளை, பிரித்தானியாவின் ஹீத்ரோ விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டதால் நேற்று (21) கொழும்பில் (Colombo) இருந்து லண்டன் புறப்படவிருந்த இரு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பயணிகளின் சிரமத்திற்கு மன்னிப்பு கோரியுள்ள சிறிலங்கா எயார்லைன்ஸ் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக தெரிவித்துள்ளது. உதவி தேவைப்படும் பயணிகள் சிறிலங்கன் எயார்லன்ஸ் வாடிக்கையாளர் மையத்தை 1979 (இலங்கை), +94117 77 1979 (சர்வதேசம்) அல்லது +94744 44 1979 (வாட்ஸ்அப் ) என்ற எண்களின் தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹீத்ரோ விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டவுடன் லண்டனுக்கு விமானங்கள் மீண்டும் இயக்கப்படும் என சிறிலங்கா எயார்லைன்ஸ் அறிவித்திருந்தது
ரஷ்யாவின் நாசவேலை
ஹீத்ரோ விமான நிலைய (Heathrow Airport) தீ விபத்திற்கு பின்னால் ரஷ்யா (Russia) இருக்கலாம் என நிபுணர்கள் அச்சம் வெளியிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஹீத்ரோ விமான நிலையத்தை ஸ்தம்பிக்க வைத்த தீ விபத்து, ரஷ்ய நாசவேலைக்கான அனைத்து அறிகுறிகளையும் கொண்டிருப்பதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஒரு துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து, விமான நிலையத்தை ஸ்தம்பிக்க வைத்ததுடன் அரசு ஆதரவுடன் நடத்தப்பட்ட தாக்குதலாக இருக்கலாம் என்று முன்னாள் இராணுவ அதிகாரிகளும் பாதுகாப்பு நிபுணர்களும் முன்னர் எச்சரித்துள்ளனர்.
இருப்பினும், தீ விபத்துக்கான காரணம் ஒரு பழைய மற்றும் பழுதடைந்த மின்மாற்றி உடைந்து தீப்பிடித்ததே என ஒருசாரார் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
2 வாரங்கள் முன்