லண்டனில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட போலி பூசகர்: நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு
பிரித்தானியாவின் (UK) தலைநகரான லண்டனில் (London) தன்னைக் கடவுள் என்று சித்தரித்து வயது வேறுபாடின்றி பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய போலி பூசகர் ஒருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த மார்ச் 24 ஆம் திகதி ஆரம்பமான குறித்த வழக்கின் தீர்ப்பு ஏப்ரல் 3 ஆம் திகதி மாலை முடிவுக்கு வந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், புளிக்கள் முரளிகிருஷ்ணன் என்ற போலி பூசகர் லண்டன் பானற் பகுதியில் கோவிலில் தன்னைக் கடவுள் என்று சித்தரித்து பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியுள்ளார்.
நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
இந்தக் குற்றங்கள் 2022 ஆம் ஆண்டு வசந்த காலத்திற்கும் 2023 ஆம் ஆண்டு வசந்த காலத்திற்கும் இடையில் நடந்ததாகக் கூறப்படுகிறது.
அரசு தரப்பு சட்டத்தரணி ஏப்ரல் 1 தனது இறுதி வாதத்தை முன்வைத்து பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நடந்த அநீதியை சுட்டிக்காட்டி நீதிபதியிடம் ஞாயத்தை கோரியுள்ளார்.
இதையடுத்து, ஏப்ரல் 2ஆம் திகதி குற்றஞ்சாட்டப்பட்ட புளிக்கள் முரளிகிருஷ்ணனின் சட்டத்தரணி தங்கள் மீதான குற்றச்சாட்டை மறுத்த தங்கள் இறுதி வாக்கை முன்வைத்துள்ளனர்.
இந்நிலையில், ஏப்ரல் 3 ஆம் திகதி மாலை சந்தேக நபரான போலி பூசகர் மீது இரு பாலியல் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு வூட்கிரீன் நீதிமன்றத்தில் நீதபதி 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை அளித்து தீர்ப்பு வழங்கியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஆனையிறவில் மகிந்த துவக்கிய அடையாள அழிப்பை அநுர தொடரும் முயற்சியா ! 23 மணி நேரம் முன்
