அமெரிக்காவில் வெடித்த போராட்டம்....! ட்ரம்ப், எலான் மஸ்க்கிற்கு எதிராக வீதியில் மக்கள்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) மற்றும் எலான் மஸ்க் (Elon Musk) ஆகியோருக்கு எதிராக அமெரிக்காவில் பல போராட்டங்கள் நடைபெற்று வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்க (USA) ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடந்த 2 ஆம் திகதி பல நாடுகள் மீது மேலதிக வரிகளை விதித்தார்.
வெளிநாட்டு பொருட்களுக்கு வரி விதிப்பதன் மூலம் பொருளாதார புரட்சி நடக்கிறது. இதில் நிச்சயம் வெற்றி பெறுவோம் என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கூறியுள்ளார்.
அதிகரித்து வரும் விரக்தி
டொனால்ட் ட்ரம்பின் வரி விதிப்பு உள்ளிட்ட விடயங்கள் அமெரிக்காவிற்கு சமூக மற்றும் பொருளாதார சிக்கல்களை ஏற்படுத்தும் என்பதை போராட்டக்காரர்கள் தங்கள் போராட்டங்கள் மூலம் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அமெரிக்கப் பொருளாதாரம் சரிந்து கிட்டத்தட்ட 6 ட்ரில்லியன் டொலர் மதிப்புள்ள செல்வம் அழிக்கப்பட்டதைத் தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக போராட்டக்காரர்கள் கூறியுள்ளனர்.
போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள், அமெரிக்க அரசாங்கத்தை ஒரு கோடீஸ்வரர் கையகப்படுத்துவதாகவும் குற்றம் சாட்டினர்.
அமெரிக்காவில் இடம்பெற்ற மிகப் பெரிய பேராட்டங்களில் இதுவும் ஒன்று. இது அமெரிக்கர்களிடையே அதிகரித்து வரும் விரக்தியைக் குறிக்கிறது என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
you may like this
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
