வெற்றி நிச்சயம் : ட்ரம்ப் சூளுரை
வெளிநாட்டு பொருட்களுக்கு வரி விதிப்பதன் மூலம் பொருளாதார புரட்சி நடக்கிறது. இதில் நிச்சயம் வெற்றி பெறுவோம்,'' என அமெரிக்க ஜனனாதிபதி ட்ரம்ப் கூறியுள்ளார்.
இது தொடர்பில் ஜனனாதிபதி ட்ரம்ப் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: அமெரிக்காவை விட சீனா கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. சீனா மற்றும் பல நாடுகள் நம்மை நிலைநிறுத்த முடியாத அளவிற்கு நடத்தின. நாம் ஊமையான மற்றும் உதவியற்ற வகையில் இருந்தோம். இனிமேல் அப்படி இருக்காது. முன் எப்போதும் இல்லாத வகையில் வேலைவாய்ப்புகள் மற்றும் வர்த்தகத்தை மீண்டும் கொண்டு வருகிறோம்.
பொருளாதார புரட்சியில் நிச்சயம் வெற்றி பெறுவோம்
முன்எப்போதும் இல்லாத வகையில் முதலீடு குவிந்து வருகிறது. நிச்சயம்,இது ஒரு பொருளாதார புரட்சி. இதில் நிச்சயம் வெற்றி பெறுவோம். இது எளிதான விஷயம் அல்ல. ஆனால், அதன் பலன் வரலாற்று ரீதியில் சிறப்பானதாக இருக்கும். மீண்டும் அமெரிக்காவை சிறப்பானதாக மாற்றுவோம். இவ்வாறு அந்த அறிக்கையில் ட்ரம்ப் கூறியுள்ளார்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இறக்கைகள் வெட்டப்பட்ட நிலையில் கலகம் செய்வாரா பிமல்..!
3 நாட்கள் முன்