லண்டன் முதல் ஜெனிவா வரையிலான மிதிவண்டிப் பயணம் - எட்டாம் நாளை கடந்தது
பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் இடம்பெற்றுவரும் லண்டன் முதல் ஜெனிவா வரையிலான மிதிவண்டிப் பயணம் இன்று தனது எட்டாம் நாள் பயணத்தை கடந்துள்ளது.
முதலில் பெல்ஜியத்தின் அத்தேர், மாநகரசபையில் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினரும் நகர முதல்வருமான யோசி அரேன்சுடனுடன் செயற்பாட்டாளர்கள் சந்திப்புக்களை நடத்தியிருந்தனர். அதன் பின் அர்லோன் மாநகரசபையில் சந்திப்புகள் இடம்பெற்றிருந்தன.
அதற்கு பின் இன்று பிற்பகலில் லக்ஸம்பேர்க் நாட்டுக்குள் பயணக்குழு நுழைந்து அங்கும் சந்திப்புகள் இடம்பெற்றன. அங்கேயே இன்றைய நாளுக்குரிய பயணம் இன்று மாலை நிறைவுசெய்யப்பட்டது.
இதேபோலவே பிரான்சில் உள்ளுராட்சி கட்டமைப்புகளை சந்தித்து தமிழினத்துக்கு நீதிகோரும் பரப்புரை செயற்பாடுகள் இன்று ஒன்பதாவது நாளாக பெசன்சோன் பகுதியில் இடம்பெற்றிருந்தன.
தமிழ்பண்பாட்டு வலையம் மற்றும் அனைத்துலக உரிமைசங்கம் ஆகிய அமைப்புகளின் ஏற்பாட்டில் இடம்பெற்றுவரும் இந்த நீதிகோரும் செயற்பாட்டில் தமிழினப்படுகொலைக்குரிய சாட்சியப்பதிவுகள் காட்சிப்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.