ஈழத் தமிழினத்துக்காக நீதிகோரிவரும் புலம்பெயர் செயற்பாட்டாளர்களின் பரப்புரை செயற்பாடுகள் தீவிரம்
ஐ.நா மனித உரிமை பேரவையில் இன்று மனித உரிமை ஆணையாளர் மிச்செல் பச்லெட் இலங்கை தொடர்பான அறிக்கையிடலை செய்த அதே சமகாலத்தில் ஈழத் தமிழினத்துக்காக நீதிகோரிவரும் புலம்பெயர் செயற்பாட்டாளர்களின் பரப்புரை செயற்பாடுகளும் தீவிரமாக நடத்தப்பட்டுள்ளன.
பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் இடம்பெற்றுவரும் லண்டன் முதல் ஜெனிவா வரையிலான மிதிவண்டி பயணத்தின் 15 ஆம் நாளான இன்று சுவிஸ் ஊடாக பயணம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இன்று காலை லீஸ்ரெல் மாநகரசபை முன்றலில் இடம்பெற்ற அரசியல் சந்திப்பின் பின்னர் அங்கிருந்து பயணப்பட்ட செயற்பாடடாளர்கள் இன்று மாலை Solothurn மாநகரசபையை சென்றடைந்தனர்.
நாளை பேர்ண்நகரை நோக்கி பயணம் இடம்பெறவுள்ளது. இந்தப்பயணம் ஐ.நா மனிதஉரிமைபேரவையை எதிர்வரும் 20 ஆம் திகதி சென்றடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேபோல தமிழ்ப்பண்பாட்டு வலையம் மற்றும் அனைத்துலக மனித உரிமை சங்கம் ஆகிய அமைப்புகளின் ஏற்பாட்டில் இன்றும் ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் வதிவிட முன்றலில் தமிழினப்படுகொலைக்குரிய சாட்சியப்பதிவுகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.