Lords of Hormuz ! பீதியூட்டும் அதிபதிகள்! சக்திவள &சமூகவளஅவலத்துக்குள் தமிழர்கள்!
Lords of Hormuz அல்லது ஹோர்முஸின் அதிபதி என்ற இந்த விளிப்பு ஒன்று ஏதோ ஆங்கில படம் ஒன்றின் தலைப்போ அல்லது ஏதோ ஒரு பரபரப்பான ஆங்கில தொலைக்காட்சித்தொடரோ அல்ல. மாறாக இன்று காலை வெளியான ஈரானிய அரசின் ஆங்கில மொழி தினசரியான தெஹ்ரான் ரைம்ஸின் முதற்பக்கத்தலைப்பு இது.
ஹோர்முஸ் நீரிணையை ஈரானிய புரட்சிகர இராணுவத்தின் தலைக்கவசம் ஒன்று மறைக்கும் நிழற்படத்துடன் இந்த Lords of Hormuz தலைப்புச் செய்திவந்தது இந்த குறுகிய நீரிணையை மையப்படுத்தி அமெரிக்காவும் ஈரானும் ஆடும் தன்னங்கார (ஈகோ) ஆட்டம் உலகின் சக்திவள நெருக்கடியை தீவிரப்படுத்துவதால் இன்று திங்கட்கிழமை அதிகாலையே ஆசியப் பங்குச் சந்தைகள் கடுமையான வீழ்ச்சியுடன் தமது வணிகத்தை ஆரம்பித்தன.
இலங்கை, இந்தியா உட்பட்ட தெற்காசிநாடுகள் முதல் ஜப்பான், தென் கொரியா, தைவான் என நீளும் கிழக்காசிய நாடுகள் வளைகுடா நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் எண்ணெய் மற்றும் எரிவாயுவே அவற்றின் சக்திவள முதுகெலும்பாக இருக்கும் பின்னணியில் நான்காவது வாரத்துக்குள் நுழைந்துவிட்ட இந்தப்போர் அவற்றை தொடர்ந்தும் அடிக்கின்றது.
இலங்கைக்கும் விதிவிலக்கு இல்லை. அதன் தாக்கங்களும் எதிர்வினைகளும் தொடர்கின்றன.
தமிழ்மக்களுக்கு இந்த நெருக்கடிகளுக்கு அப்பால் அதிர்ச்சியூட்டும் சமூக அவல சம்பவங்களும் வடக்கு- கிழக்காக துரத்துகின்றன.
இந்தப் பின்னணியில் ஹோர்முஸ் நீரிணையை திறக்குமாறு ஈரானுக்கு ட்ரம்ப் விதித்த 48 மணி நேரக்கெடுவின் முடிவு இந்த பதிவு பதியும் போது நெருங்கிவிட்டதால் ஈரானின் பல மின் உற்பத்தி நிலையங்கள் இருப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள பின்னணியில் உலகம் முதல் உள்ளுர்வரையான நிலவரங்களை தொட்டுவருகிறது செய்திவீச்சு…
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |