எரிபொருள் சிக்கலால் மணல் லொறிகளின் கட்டணங்கள் உயர்வு
நாட்டில் அதிகரித்து வரும் எரிபொருளின் சிக்கலை தொடர்ந்து பொலன்னறுவை - மனம்பிட்டிய பகுதியிலிருந்து ஏனைய பகுதிகளுக்கு மணலைக் கொண்டு செல்வதற்கான செலவு அதிகரித்துள்ளது.
இதன்படி, மூன்று கன அடி மணலைக் கொண்டு செல்வதற்கான செலவு பதினைந்தாயிரம் ரூபாயாக அதிகரித்துள்ளதாக மனம்பிட்டிய மணல் அள்ளும் லொறி சங்கத்தின் தலைவர் அஜித் கமகே தெரிவித்துள்ளார்.
போக்குவரத்துச் செலவை அதிகரிக்க நடவடிக்கை
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், மனம்பிட்டியத்திலிருந்து கொழும்புக்குக் கொண்டு செல்லப்பட்ட மூன்று கன அடி மணல் 1,40,000 ரூபாய்க்கு விற்கப்பட்டதாகவும், எரிபொருள் விலை உயர்வால் ஓட்டுநர்கள் விலையை 1,55,000 ரூபாயாக உயர்த்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து மனம்பிட்டிய மணலுக்கு பெரும் தேவை இருப்பதால், கொழும்பு, பாணந்துறை, கிரிபத்கொட, கடவத்த, குளியாபிட்டிய, அனுராதபுரம், காலி, மற்றும் பிற பகுதிகளுக்கும் மணலைக் கொண்டு செல்வதற்கான போக்குவரத்துச் செலவை அதிகரிக்க வேண்டியிருக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |