சொகுசு வாகனங்களை கைவிட்ட எம்.பிக்கள்
Colombo
Parliament of Sri Lanka
By Sumithiran
பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிறிய கார்கள் மற்றும் வான்களில் இன்றையதினம் (17) நாடாளுமன்றம் வருகை தந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
பாதுகாப்பு காரணங்களுக்காக அவர்கள் அத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டிருக்கலாம் என்று நாடாளுமன்ற அதிகாரிகள் தெரிவித்தனர்.
நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று மிகக் குறைவான சொகுசு வாகனங்களே காணப்பட்டன. எம்.பி.க்களுடன் மேலும் பாதுகாப்புப் படையினரும் வருகை தந்தனர்.
இதேவேளை, ஏறக்குறைய 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று (17) நாடாளுமன்றத்தில் முன்னிலையாகவில்லை.
தீவைப்பு மற்றும் வன்முறைகள் காரணமாக சில நாடாளுமன்ற உறுப்பினர்களின் படுக்கைகள் கூட முற்றாக அழிக்கப்பட்டுள்ளதாக எஸ்.எம்.சந்திரசேன உட்பட பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தனர்.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்