இங்கிலாந்தில் மூதாட்டிக்கு பிறந்த நாளில் அடித்த அதிஷ்டம்
United Kingdom
Lottery
By Sumithiran
இங்கிலாந்தில் 70 வயது மூதாட்டி ஒருவருக்கு பிறந்தநாளில் அதிஷ்ட இலாப சீட்டிழுப்பில் பெருந்தொகை பணம் கிடைத்துள்ளது.
இங்கிலாந்தில் உள்ள டோர்கிங் பகுதியை சேர்ந்தவர் டோரிஸ் ஸ்டான்பிரிட்ஜ் என்ற பெண். தனது 70-வது பிறந்த நாளையொட்டி அதிஷ்ட இலாப சீட்டு வாங்கியுள்ளார்.
அடித்த அதிஷ்டம்
அவருக்கு அந்த அதிஷ்ட இலாப சீட்டிழுப்பில் பரிசுத் தொகை விழுந்துள்ளது.

அதாவது 30 வருடங்களுக்கு மாதாந்தம் 10 ஆயிரம் பவுண்டுகள் பணப்பரிசு கிடைக்கவுள்ளது.
30 ஆண்டுகளுக்கு மாதம் 10 ஆயிரம் பவுண்டுகள்
இது தொடர்பான மின்னஞ்சல் அவருக்கு வந்துள்ளது. முதலில் அந்த மின்னஞ்சலைப் பார்த்த போது அவர் 10 பவுண்டுகள் மட்டுமே பரிசு வந்ததாக நினைத்துள்ளார்.
ஆனால் தொடர்ந்து அந்த மின்னஞ்சலை வாசித்த போது தான் அவருக்கு 30 ஆண்டுகளுக்கு மாதம் 10 ஆயிரம் பவுண்டுகள் வெற்றி பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது.
மரண அறிவித்தல்