தாமரை கோபுரத்தில் பெண்கள் செய்த நாசகர செயல் - சிசி ரிவியில் சிக்கிய சம்பவம்
Colombo
Lotus Root
Tourism
By pavan
கொழும்பில் உள்ள தாமரை கோபுரத்தில் சொத்துக்களை சேதப்படுத்திய குற்றசாட்டில் பெண்களும் ஆண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று (10) இடம்பெற்றுள்ளது.
குறித்த பெண்கள் வெளிப்புற கண்காணிப்பு தளத்தின் விளிம்பில் எழுதுவதை அங்குள்ள சிசி ரிவி கண்காணிப்பு கமராவில் பிடிபட்டுள்ளது.
கொழும்பு தாமரைக் கோபுர முகாமைத்துவ நிறுவனத்தினால் அறிவிக்கப்பட்டதையடுத்து மருதானை காவல்துறையினரால் குறித்த குழுவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விடுக்கப்பட்ட எச்சரிக்கை
சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பவர்களுக்கு எதிராக கடுமையான தண்டனை நடைமுறைப்படுத்தப்படும் என கொழும்பு தாமரைக் கோபுர முகாமைத்துவ நிறுவனத்தினால் பல எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
எவ்வாறாயினும், எச்சரிக்கைகள் இருந்தபோதிலும், அண்மைக்காலமாக அழிவுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்