தமிழ்மொழி தொடர்பில் பிரதமர் மோடி வெளியிட்ட தகவல்
உலகின் மிகப் பழைமையான தமிழ்மொழி மீது தமக்குள்ள முயற்சிகளும் அன்பும் ஒருபோதும் குறையாது என இந்திய பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி மனத்தின் குரல் என்னும் பெயரில் மாதத்துக்கு ஒருமுறை வானொலியில் உரையாற்றி வருகிறார். இன்றைய உரையில், ஒலிம்பிக் போட்டிக்கு இந்தியாவின் சார்பில் செல்லும் வீரர் வீராங்கனைகள் இன்னல்களைக் கடந்து முன்னேறியதை எடுத்துக் கூறினார். இதன்போதே தனது தமிழ் மொழி பற்று தொடர்பில் அவர் மேறகண்டவாறு தெரிவித்தார்.
தான் தமிழை உச்சரிக்கும்போது பிழை இருக்கக் கூடும் என்றும், ஆனால் தமிழ் மீதான தனது முயற்சிகளும் அன்பும் ஒருபோதும் குறையாது என்றும் தெரிவித்தார்.
உலகின் மிகப் பழைமையான மொழி தமிழ் என்றும், தமிழ் மீதும் தமிழ்ப் பண்பாட்டின் மீதும் தான் பெருமதிப்புக் கொண்டிருப்பதாகத் தெரிவித்தார்.
உலகின் மிகப் பழைமையான மொழி நம் நாட்டிலுள்ளது என்பதில் இந்தியர் அனைவரும் பெருமைப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.