குறைந்த வருமானம் பெறும் மக்களின் முன்னேற்றம் குறித்து அரசாங்கம் விசேட கவனம்

Jaffna Sri Lanka Economic Crisis Government Of Sri Lanka Sri Lankan Peoples Sagala Ratnayaka
By Vanan Apr 29, 2023 11:09 AM GMT
Report

 குறைந்த வருமானம் பெறும் மக்களின் முன்னேற்றம் குறித்து அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளதாகவும் அதற்காக சமூக பாதுகாப்பு திட்டத்தை செயல்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் தேசிய பாதுகாப்பு தொடர்பான அதிபரின் சிரேஷ்ட ஆலோசகரும் அதிபரின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் வேலணை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நேற்று (28) நடைபெற்ற குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கான இலவச அரிசி வழங்கும் இரண்டாம் கட்ட ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது மேலும் உரையாற்றிய அவர்,

சிரமமான காலம்

குறைந்த வருமானம் பெறும் மக்களின் முன்னேற்றம் குறித்து அரசாங்கம் விசேட கவனம் | Low Income People Sri Lanka Govt Special Attention

“யுத்த காலத்தின் பின்னர் எமது நாட்டில் ஏற்பட்ட சிரமமான காலம் கடந்த சில வருடங்களில் ஏற்பட்டது. அதன்போது நாங்கள் முதலில் கொவிட் தொற்றுநோயை எதிர்கொண்டோம். அதன் பிறகு பொருளாதார நெருக்கடியை சந்திக்க வேண்டியிருந்தது. அந்த பொருளாதார நெருக்கடியோடு மக்கள் போராட்டத்தையும் சந்திக்க வேண்டியிருந்தது.

உணவு, மருந்துகள், எரிபொருள் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டது. மின்சாரத்தை துண்டிக்க வேண்டியதாயிற்று. அப்போது வடக்கு, தெற்கு என்ற பாகுபாடின்றி அனைத்து மக்களும் இந்தப் பிரச்சினைகளை எதிர்கொண்டனர்.

அவ்வேளையில் ரணில் விக்ரமசிங்க, அந்தப் பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கும் பொறுப்பை ஏற்று அதிபராப் பதவியேற்றார். அப்போது நாட்டில் ரூபாயைப்போன்று டொலரும் இருக்கவில்லை.

நாட்டின் பொருளாதார செயல்முறை வீழ்ச்சியடைந்திருந்தது. இந்த அனைத்துப் பிரச்சினைகளாலும் அன்னிய செலாவணி வருமானத்தை இழந்தோம். சுற்றுலா பயணிகள் வரவில்லை. தொழிற்சாலைகள் இயக்க மின்சாரம் இல்லை.போக்குவரத்து முடங்கியது.

அன்று ரணில் விக்ரமசிங்க, நாட்டைப் பொறுப்பேற்ற போது அரச ஊழியர்களின் சம்பளத்தைக் கூட வழங்க முடியாத நிலை நாட்டில் காணப்பட்டது.

பத்து நாட்கள் சென்றிருந்தால்

குறைந்த வருமானம் பெறும் மக்களின் முன்னேற்றம் குறித்து அரசாங்கம் விசேட கவனம் | Low Income People Sri Lanka Govt Special Attention

இன்னும் பத்து நாட்கள் சென்றிருந்தால் நாடு முழுவதுமாக முடங்கிவிடும். நாம் ஒரு தீவு நாடு. எங்களால் எல்லையை தாண்டி வேறு நாடுகளுக்கு செல்ல முடியாது. எங்கிருந்தும் உணவு கொண்டு வரவும் முடியாது.

ரணில் விக்ரமசிங்க நாட்டின் தலைவராக பொறுப்பேற்று ஒரு சில நாட்கள் செல்வதற்கு முன்னரே நாட்டில் சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்பட்டது.

அப்போது நிலவிய பல பிரச்சினைகள் ஒவ்வொன்றாக தீர ஆரம்பித்தன. முக்கியமாக எரிவாயு, உணவு மற்றும் எரிபொருள் ஆகியவற்றை வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன.

நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த தேவையான பணிகள் முன்னெடுக்கப்பட்டன. நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாகவே சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் உடன்படிக்கைக்கு வந்தது. அந்த ஒப்பந்தத்தை உருவாக்குவது எளிதான காரியம் அல்ல.

பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெற முடியாமல் தவிக்கும் பிற நாடுகளும் உள்ளன. சர்வதேச நாணய நிதியத்துடன் ஒரு உடன்பாட்டை எட்டுவதற்கு, முதலில் சர்வதேச நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டியது அவசியம். அந்த நம்பிக்கையின் காரணமாகவே தற்போது சர்வதேச சமூகம் எம்முடன் இணைந்து செயற்படுகின்றது.

வெளிநாட்டினர் நம் நாட்டிற்கு வருகிறார்கள். நாடு படிப்படியாக ஸ்திரம் அடைந்து வருகிறது. ஒரு அடி கூட பின்வாங்காமல் முன்னோக்கி செல்லும் வேலைத்திட்டம் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

ஆட்சி செய்வதற்கான பின்னணி

குறைந்த வருமானம் பெறும் மக்களின் முன்னேற்றம் குறித்து அரசாங்கம் விசேட கவனம் | Low Income People Sri Lanka Govt Special Attention

நாட்டை சரியான முறையில் ஆட்சி செய்வதற்கான பின்னணியை அதிபர் தற்போது தயாரித்துள்ளார்.

வடக்கில் விவசாயம் மற்றும் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்து மக்களின் பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்கான வேலைத்திட்டம் தற்போது தயாரிக்கப்பட்டுள்ளது.

நல்லிணக்கம் பற்றி நீண்ட நாட்களாக பேசப்பட்டு வருகிறது. இப்போது நல்லிணக்கம் பற்றி பேசியது போதும். இப்போது அந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது.

காணாமல் போனவர்களை கண்டறியும் நடவடிக்கையை வலுப்படுத்த வேண்டிய தேவை உள்ளது. நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும், மக்களின் வறுமையை அகற்றவும் சமூக பாதுகாப்பு திட்டம் கட்டமைக்கப்படும்” - என்றார்.

ReeCha
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Toronto, Canada

24 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வன்னிவிளாங்குளம், மல்லாவி, வவுனியா, Scarborough, Canada

11 Nov, 2020
நன்றி நவிலல்

பருத்தித்துறை, Frauenfeld, Switzerland

12 Oct, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, கன்பெறா, Australia, சிட்னி, Australia

11 Nov, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், Den Helder, Netherlands

09 Nov, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, London, United Kingdom, Paris, France

02 Nov, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
மரண அறிவித்தல்

புத்தளம், Frankfurt, Germany

06 Nov, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

Columbuthurai, கொக்குவில், கொழும்பு, Mitcham, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில், Bielefeld, Germany

18 Sep, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, மெல்போன், Australia

12 Nov, 2015
மரண அறிவித்தல்

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், Vancouver, Canada

22 Nov, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, முல்லைத்தீவு

11 Nov, 2015
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, புதுக்குடியிருப்பு, வவுனியா, செல்வபுரம்

11 Nov, 2018
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

11 Nov, 2014
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, ஆனைக்கோட்டை

08 Nov, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

சரசாலை வடக்கு, Rorschach, Switzerland

06 Nov, 2025
மரண அறிவித்தல்
20ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024