மீண்டும் ஒரு புயலுக்கான வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பு
அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வங்கக் கடலில் உருவான மிக்ஜாம் புயல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களை புரட்டிப் போட்டுள்ளது.
மிக்ஜாம் புயல் காரணமாக கொட்டிய கன மழையால் இந்த நான்கு மாவட்டங்களில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்கள் சொல்ல முடியாத அளவிற்கு துன்பத்திற்கு ஆளானதோடு 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
வளிமண்டல சுழற்சி
இந்நிலையில், அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாகவும், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஓட்டிய மாலைத்தீவு பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது என்றும், அதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதன் காரணமாக தமிழகத்தில் இடி மின்னலுடன் கூடிய சிறிதளவு மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |