வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் உருவாகும் சாத்தியம் - விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்பை அண்டிய பகுதிகளில் எதிர்வரும் 13ஆம் திகதியளவில் குறைந்த காற்றழுத்தப் பிரதேசம் உருவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தால் வெளியிடப்படும் எதிர்கால வானிலை முன்னறிவிப்புகள் மற்றும் அறிவிப்புகள் குறித்து அவதானத்துடன் இருக்குமாறு கடற்றொழிலாளர்கள் மற்றும் கடற்படையினரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம்
காற்று வடகிழக்கு திசையிலிருந்து அல்லது குறிப்பிட்ட திசையின்றி வீசக்கூடும் என்பதுடன், காற்றின் வேகம் மணித்தியாலத்துக்கு 20 முதல் 30 கிலோமீற்றர் வரை காணப்படலாம்.
]
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் காற்றின் வேகம் மணித்தியாலத்துக்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும்.
இதனால் குறித்த கடற்பரப்புகள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையை அடையக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |