கடும் வறட்சி - மின் உற்பத்தி நிலையங்களில் வேகமாக குறைந்து வரும் நீர்மட்டம்(படங்கள்)
drought
water level
power plants
By Sumithiran
இலங்கை மின்சார சபையின் நீர்த்தேக்கங்களில் நீர் மட்டம் குறைந்துள்ளதால் நீர் மின் உற்பத்தி மேலும் தடைப்படும் அபாயம் காணப்படுவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
தற்போது, நாடு முழுவதையும் பாதித்துள்ள கடும் வறட்சியான காலநிலை காரணமாக மின்சாரம் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாக வீழ்ச்சியடைந்து வருகின்றது.
நாட்டின் குடிநீர் தேவை மற்றும் விவசாய நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்பதால், மகாவலி நீர்த்தேக்கங்களில் இருந்து நீர் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்காக நீர் விடுவிக்கப்படுவதும் கட்டுப்படுத்தப்பட வேண்டும்.
எனவே மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.







1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி