இலங்கை வரலாற்றில் கடும் குளிரான நாள் நுவரெலியாவில் பதிவு
இலங்கையின் வரலாற்றில் பதிவான மிகக் குறைந்த வெப்பநிலை இன்று (22) நுவரெலியாவில் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, நுவரெலியாவில் இன்று காலை வெப்பநிலை 3.5°C ஆக பதிவாகியுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
2009 ஆம் ஆண்டுக்குப் பிறகு இலங்கையில் பதிவான மிகக் குறைந்த வெப்பநிலையாக இது வரலாற்றில் இடம் பெற்றுள்ளது.
குளிரான காலநிலை
இதேவேளை, பண்டாரவேலாவில் 11.5°C, பதுளையில் 15.1°C மற்றும் கட்டுகஸ்தோட்டையில் 15.9°C, மத்திய மற்றும் ஊவா மாகாணத்தின் பல பகுதிகளிலும் பரவலான குளிரான காலநிலை பதிவாகியுள்ளது.

எவ்வாறாயினும், வடக்கு மற்றும் தெற்கு மாகாணங்களின் சில பகுதிகளில் ஓரளவு வெப்பமான காலநிலை பதிவாகியுள்ளது.
முல்லைத்தீவில் காலை நேரத்தில் அதிகபட்ச வெப்பநிலை 25.3°C ஆகவும், ஹம்பாந்தோட்டையில் 22°C ஆகவும், கொழும்பில் 22.1°C ஆகவும் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |