நள்ளிரவு முதல் அதிகரிக்கிறது லாப் எரிவாயு விலை
                                    
                    Sri Lankan Peoples
                
                                                
                    Litro Gas Price
                
                                                
                    Laugfs Gas Price
                
                        
        
            
                
                By Sumithiran
            
            
                
                
            
        
    லிட்ரோ சமையல் எரிவாயு விலை, இன்று (4) நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளநிலையில் லாப் எரிவாயுவின் விலையையும் இன்று நள்ளிரவு முதல் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி 12.5 கிலோ கிராம் எடை கொண்ட லாப் எரிவாயு கொள்கலனின் விலை 145 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
புதிய விலை விபரம்

இதற்கமைய 12.5 கிலோ கிராம் எடை கொண்ட லாப் எரிவாயு கொள்கலனின் புதிய விலை 3,835 ரூபாவாகும்.
இதேவேளை, 5 கிலோ கிராம் லாப் எரிவாயு கொள்கலனின் விலை 59 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய 5 கிலோ கிராம் எடை கொண்ட லாப் எரிவாயு கொள்கலனின் புதிய விலை 1,535 ரூபாவாகும்.
    
                                
            12ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            மரண அறிவித்தல்