இறுதிப் போரில் படுகொலை செய்யப்பட்ட இசைப்பிரியாவின் உருவப்படம் காலி முகத்திடல் போராட்ட களத்தில்
காலி முகத்திடலில் நடைபெற்று வரும் போராட்டக் களத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பின் ஊடகவியலாளரான இசைப்பிரியாவின் புகைப்படம் தாங்கி பதாகை காட்சிபடுத்தப்பட்டுள்ளது.
கொழும்பு காலி முகத்திடலில், அரச தலைவர் செயலகத்திற்கு முன்பாக அரச தலைவரையும் அவரது அரசாங்கத்தையும் பதவி விலகுமாறு நீண்ட நாட்களாக போராட்டம் நடைபெற்று வருகின்றது.
இதேவேளை, காலி முகத்திடல் போராட்டக் களத்தில் இலங்கையில் கடத்தி காணாமல் ஆக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் புகைப்படங்கள் தாங்கிய பதாதைகள் வைக்கப்பட்டிருந்தன.
எனினும், கடந்த சில தினங்களுக்கு முன்னர் அந்த பதாதைகள் அகற்றப்பட்டிருந்தன. இறந்த ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி இவ்வாறான பதாதைகள் வைக்கப்பட்டிருந்து அவை அகற்றப்பட்ட பின்னர் இன்று மீண்டும் அந்த பதாதைகளை அங்கு வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட யுத்தத்தில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஊடகவியலாளர் இசைப்பிரியாவின் புகைப்படத்தை தாங்கிய பதாதையும் அங்கு காட்ச்சிப்படுத்தப்பட்டுள்ளது .
விடுதலைப் புலிகளின் ஊடகங்களான நிதர்சனம் உட்பட அவர்களின் ஏனைய ஊடகங்களில் பணியாற்றியவரே இசைப்பிரியா.