விடுதலை புலிகளின் தலைவரது காணிக்கு சிவப்பு எச்சரிக்கை - உடன் எடுக்கப்பட்ட நடவடிக்கை

Sri Lanka Army Sri Lankan Tamils Sri Lanka LTTE Leader
By Kiruththikan Sep 20, 2022 01:42 PM GMT
Report

இரண்டாம் இணைப்பு

யாழ்ப்பாணம் - வல்வெட்டித்துறையில் உள்ள தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பெற்றோரின் வீட்டுக் காணி இளைஞர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களினால் இன்று சிரமதானம் செய்யப்பட்டுள்ளது.

குறித்த காணியின் புனிதத் தன்மையை பாதுகாக்கும் வகையில் பிரதேச மக்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

வல்வெட்டித்துறையில் உள்ள தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பெற்றோரின் காணியில் இருந்த வீடு முற்றாக இடித்து அழிக்கப்பட்ட நிலையில் காணி பராமரிப்பின்றி கைவிடப்பட்டுள்ளமையால் அப்பகுதியில் பற்றைகள் வளர்ந்திருந்தன.

பற்றைகளினால் டெங்கு நுளம்புகள் பரவும் அபாயம் உள்ளது எனச் சுட்டிக்காட்டி, குறித்த காணியினை துப்புரவு செய்து 22ஆம் திகதிக்கு முன் தமக்கு அறியத்தரவேண்டும் எனவும், தவறும் பட்சத்தில் குறித்த காணி தங்களால் கையேற்கப்படும் எனவும் வல்வெட்டித்துறை நகரசபை சிவப்பு எச்சரிக்கையினை காட்சிப்படுத்தியுள்ளது.

பிரதேச மக்களால் வழங்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய, டெங்கு நுளம்பு தொடர்பாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறை நகரசபை தவிசாளர் இராமச்சந்திரன் சுரேன் தெரிவித்திருந்தார்.

இதனையத்து குறித்த காணி தொண்டு நிறுவனங்கள் மற்றும் பிரதேச இளைஞர்களினால் சிரமதானம் செய்யப்பட்டுள்ளது.

விடுதலை புலிகளின் தலைவரது காணிக்கு சிவப்பு எச்சரிக்கை - உடன் எடுக்கப்பட்ட நடவடிக்கை | Ltte Leader House Red Warning

முதலாம் இணைப்பு

யாழ்.வல்வெட்டித்துறையில் உள்ள தமிழீழ விடுதலை புலிகளின் தலைவரின் வீட்டு காணிக்கு வல்வெட்டித்துறை நகரசபையினால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கின்றது.

காணியில் இருந்த வீடு முற்றாக அடித்து அழிக்கப்பட்ட நிலையில் காணி பராமரிப்பின்றி கைவிடப்பட்டுள்ளமையால் அப்பகுதியில் பற்றைகள் வளர்ந்துள்ளன.

பற்றைகளினால் டெங்கு நுளம்புகள் பரவும் அபாயம் உள்ளது என சுட்டிக்காட்டி, குறித்த காணியினை துப்புரவு செய்து 22ம் திகதிக்கு முன் தமக்கு அறியத்தரவேண்டும் எனவும், தவறும் பட்சத்தில் குறித்த ஆவணம் தங்களால் கையேற்கப்படும் எனவும் வல்வெட்டித்துறை நகரசபை சிவப்பு எச்சரிக்கையினை காட்சிப்படுத்தியுள்ளது.

உரிமைகோரினால் காவல்துறை, இராணுவம் பிரச்சினைகள்

விடுதலை புலிகளின் தலைவரது காணிக்கு சிவப்பு எச்சரிக்கை - உடன் எடுக்கப்பட்ட நடவடிக்கை | Ltte Leader House Red Warning

இது குறித்து வல்வெட்டித்துறை நகரசபை தவிசாளர் இராமச்சந்திரன் சுரேன் ஊடகங்களுக்கு தொிவிக்கையில், பிரதேச மக்களால் வழங்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உடனடியாக துப்புரவு செய்ய முயற்சித்தால் காவல்துறை, இராணுவம் என பிரச்சினைகள் வரும் என்பதால் சிவப்பு எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.

பின்னர் நகரசபை தொடர்ச்சியாக அந்த வளாகத்தை துப்புரவு செய்யும் எவரேனும் அதற்கு உரிமைகோரினால் பராமரிப்பு செலவுடன் மீள வழங்கப்படும் என்றார்.

நானே பொறுப்பேற்று துப்புரவு செய்வேன் - சிவாஜிலிங்கம்

விடுதலை புலிகளின் தலைவரது காணிக்கு சிவப்பு எச்சரிக்கை - உடன் எடுக்கப்பட்ட நடவடிக்கை | Ltte Leader House Red Warning

இந்த காணி நீண்டகாலமாக துப்பரவு செய்யப்படவில்லை எனவும் குறிப்பிடப்படுகிறது.

இது குறித்து எம்.கே.சிவாஜிலிங்கம் ஊடகங்களுக்கு கருத்து தொிவிக்கையில், வல்வெட்டித்துறையில் எத்தனை இடங்களில் கடுகளாக பற்றைகள் வளர்ந்துள்ளது.

அனைத்துக்கும் சிவப்பு எச்சரிக்கை ஒட்டியுள்ளார்களா? அந்த காணியை நானே பொறுப்பேற்று துப்புரவு செய்வேன் என்றார். 

ReeCha
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017