கெடுபிடிகளுக்கு மத்தியில் தயாராகிவரும் முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லம்(காணொளி)
தமிழ் மக்களுக்கான உரிமை போரின் போது தங்களது இன்னுயிர்களை ஈக்கம் செய்த மாவீரர்களை வணங்குகின்ற கார்த்திகை 27 மாவீரர் நாள் நிகழ்வுகள் இம்முறை தமிழர் தாயகமெங்கும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட ஏற்பாடாகி வருகிறது.
அந்த வகையில் முல்லைத்தீவு மாவட்டத்திலும் அனைத்து துயிலும் இல்லங்கள் மற்றும் வழமையாக மாவீரர் நினைவு நாளை அனுஷ்டிக்கின்ற பல்வேறு இடங்களிலும் இந்த மாவீரர் நாள் நினைவேந்தலை அனுஷ்டிப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து உயிரிழந்தவர்களை நினைவு கூறுவதற்கான தடையை நீதிமன்றம் ஊடாக பெற்றுக்கொண்ட முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு காவல் நிலையங்களை சேர்ந்தகாவல்துறையினர் துயிலுமில்லங்களிலே மாவீரர் துயிலும் இல்லம் என எழுதப்பட்ட வாயில்களை அகற்றுமாறு நிற்ப்பந்தித்து வருகின்றனர்.
மாவீரர் நாள் நிகழ்வு
இவ்வாறான பின்னணியிலே முல்லை த்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்திலும் காவல்துறையினரின் கெடுபிடிகளுக்கு மத்தியிலும் மாவீரர் நாளை அனுஷ்டிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி ஆகி வருவதாகவும் எனவே மக்களை அச்சமின்றி வருகை தந்து மாவீரர் நாள் நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு பணிக் குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.